செய்யக்கூடாததை செய்து அப்பட்டமாக மாட்டிக்கொண்ட ஜடேஜா; வார்னிங் கொடுத்து அபராதம் விதித்த ஐசிசி! 1

முறையான அனுமதி இல்லாமல், கையில் வலி நிவாரணி பூசியதற்காக ஜடேஜாவிற்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்சில் அபாரமாக செயல்பட்ட ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ரவீந்திர ஜடேஜா, சுமார் ஆறு மாத காலம் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். முதல் டெஸ்டில் சிறப்பான கம்பேக் கொடுத்து, பவுலிங்கில் அசத்திய கையோடு பேட்டிங்கிலும் 70 ரன்கள் அடித்து மிக முக்கிய பங்காற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 34 ரன்களுக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

செய்யக்கூடாததை செய்து அப்பட்டமாக மாட்டிக்கொண்ட ஜடேஜா; வார்னிங் கொடுத்து அபராதம் விதித்த ஐசிசி! 2

பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவிற்கு முதல் டெஸ்டில் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்த மகிழ்ச்சியில் ஜடேஜா இருக்கும் தருவாயில், போட்டியில் இருந்து 25 சதவீதம் அபராதம் மற்றும் ஒழுக்கக்கேடு புள்ளிகளில் ஒரு புள்ளி குறைப்பு என ஐசிசி அடுக்கடுக்காக ஜடேஜாவின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

செய்யக்கூடாததை செய்து அப்பட்டமாக மாட்டிக்கொண்ட ஜடேஜா; வார்னிங் கொடுத்து அபராதம் விதித்த ஐசிசி! 3

இதற்கு முக்கிய காரணம், முதல் இன்னிங்சில் களத்தில் இருந்த நடுவரிடம் முறையான அனுமதி பெறாமல் கையில் வலி நிவாரணி பசையை பூசிக்கொண்டு ஜடேஜா பந்துவீசினார். இது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக பார்க்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஜடேஜா மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “பிசிசிஐ மற்றும் ஜடேஜா தரப்பிலிருந்து கூறப்பட்டதுபடி, கையில் வீக்கம் ஏற்பட்டதால் அந்த வலி நிவாரணி பூசப்பட்டது என்பது முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்கு முறையான அனுமதியை நடுவரிடம் பெற்றிருக்க வேண்டும். இதை ஜடேஜா செய்யத் தவறிவிட்டார். அதற்காக ஜடேஜாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்யக்கூடாததை செய்து அப்பட்டமாக மாட்டிக்கொண்ட ஜடேஜா; வார்னிங் கொடுத்து அபராதம் விதித்த ஐசிசி! 4

மேலும், “வீடியோ காட்சிகளை வைத்து பார்க்கையில் ஜடேஜா தனது விரலில் மட்டுமே வலி நிவாரணியை பூசினார். போட்டியில் பயன்படுத்திய பந்தில் அவர் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆகையால் பந்தை சேதப்படுத்தியது, போட்டி விதிமுறைகளை மீறியது, முறையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் முறைகேடாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *