ஓல்ட் ட்ராபோர்டில் லங்காஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிக்கு இடையிலான போட்டியின் போது இடுப்பு வலி காரணமாக மைதானத்தை விட்டு விலகினார்.
யார்க்ஷயர் அணிக்கு எதிராக பந்துவீசி கொண்டிருக்கும் போது இடுப்பு வழியால் அவர் கீழே விழுந்தார். இதனால் அவர் மைதானத்தை விட்டு உடனே வெளியேறினார். ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதால் அவர் திரும்ப மைதானத்தினுள் வரவில்லை.
கடந்த இரண்டு வருடங்களில் அன்டேர்சனுக்கு இது 4வது காயம். கடந்த டிசம்பரில் இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அவர் விளையாடவில்லை. அன்றிலிருந்து இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்கிறார்.
தோள்பட்டை காயங்கள் காரணமாக இங்கிலாந்து விளையாடிய கடைசி 23 டெஸ்ட் போட்டிகளில் 8-போட்டிகளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.
அவரது அடுத்த நோக்கம் என்னவென்றால் இந்த வருடத்தில் வரும் ஆஷஸ் தொடர் விளையாடுவது தான். இதனால் அவருடைய ஓய்வை பற்றி எந்த தகவுலயும் சொல்ல வில்லை.
மே 22-ஆம் தேதி ஸ்கேன் எடுப்பார் என தெரிகிறது.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 467 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 2016-ஆம் ஆண்டில் அவர் விளையாடிய 12 போட்டிகளில் 41 விக்கெட் எடுத்தார்.
அவர் அடுத்து வரும் தென்னாபிரிக்கா தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இல்லை என்றாலும், டெஸ்ட் அணிக்கு நட்சத்திர வீரராக இருக்கிறார்.
ஜூலை மாதத்தில் தென்னாப்ரிக்காவுடன் 4 டெஸ்ட் போட்டிகளும், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளும் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதனால், இந்த தொடரில் பங்கேற்று 33 விக்கெட்டுகள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500-விக்கெட் எடுக்க நினைப்பார் ஆண்டர்சன்.