4ஆவது இடம் , பும்ரா அசத்தல்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 15-விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.
அதோடு, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
போட்டியின் முடிவில் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு எஸ். யு. வி ரக கார் தொடர் நாயகன் விருதாக பரிசளிக்கப்பட்டது.
ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர் தரவரிசை
ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தர வரிசை பட்டியல்
Rank | Name | Country | Rating |
1 | ஜோஸ் ஹசல்வுட் | AUS | 732 |
2 | இம்ரான் தாஹீர் | SA | 718 |
3 | மிட்செல் ஸ்டார்க் | AUS | 701 |
4 | ஜஸ்ப்ரிட் பும்ரா | IND | 687 |
5 | ககிசோ ரபடா | SA | 685 |
6 | ட்ரென்ட் போல்ட் | NZ | 665 |
7 | ஹசன் அலி | PAK | 663 |
8 | சுனில் நரைன் | WI | 662 |
9 | ரசிட் கான் | AFG | 647 |
10 | அக்சர் படேல்
|
பும்ராவைத் தவிர்த்து மற்ற இந்திய வீரர்களும் பந்வீச்சு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி, இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஹர்த்திக் பாண்டியாக இரண்டு இடங்கள் முன்னேறி 61-வது இடத்திலும், குல்திப் யாதவ் 21 இடங்கள் முன்னேறி 89-வது இடத்திலும், சாஹல் 55 இடங்கள் முன்னேற்றம் கண்டு 99-வது இடத்திலும் உள்ளனர்.
ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியல்
தரம் | வீரர் | நாடு | புள்ளிகள் |
1 | விராத் கோலி | IND | 887 |
2 | டேவிட் வார்னர் | AUS | 861 |
3 | டீ வில்லியர்ஸ் | SA | 847 |
4 | ஜோ ரூட் | ENG | 799 |
5 | பாபர் அசாம் | PAK | 786 |
6 | கேன் வில்லியம்சன் | NZ | 779 |
7 | டீ காக் | SA | 769 |
8 | டு ப்லெஸ்சிஸ் | SA | 768 |
9 | ரோகித் சர்மா | IND | 764 |
10 | கப்டில் | NZ | 749 |
ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
இலங்கைக்கு அணிக்கு எதிராக ஒருநாள்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடிய கோலி, 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசம் உட்பட 330 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறார் விராட் கோலி.
முன்னதாக கடந்த 1998-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் அணி தர வரிசை பட்டியல் :
Rank | Team | Points |
1 | தென்னப்பிரிக்கா | 119 |
2 | ஆஸ்திரேலியா | 117 |
3 | இந்தியா | 117 |
4 | இங்கிலாந்து | 113 |
5 | நியூசிலாந்து | 111 |
6 | பாகிஸ்தான் | 95 |
7 | வங்காளதேசம் | 94 |
8 | இலங்கை | 88 |
9 | மேற்கிந்திய தீவுகள் | 78 |
10 | ஆப்கானிஸ்தான் | 54 |
இதேபோல, பேட்டிங் தரவரிசையில் மற்ற இந்திய வீரர்களான ரோகித் சர்மா 9-வது இடத்திலும், மகேந்திர சிங் டோனி 11-வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணி சந்தித்த படுதோல்வியினால், 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
நேரடியாக தகுதிபெற முடியாத அணிகள், உலக்கோப்பை தகுதி சுற்று போட்டியின் மூலம் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.