இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணியின் தோல்வி குறித்து தேர்வு வாரிய குழு தலைவர் ஜெயசூர்யா கூறியதாவது:
சொந்த மண்ணில் இந்தியாவிடம், 3-0 என இலங்கை தோல்வியடைந்தது மிகவும் வேதனையை தருகிறது. அதுவும் இலங்கை இரண்டு இன்னிங்ஸில் 135 மற்றும் 181 என எடுத்து 3வது நாளிலேயே இந்திய அணியிடம் சரணடைந்தது கஷ்டமாக உள்ளது. இந்த நிலையில், வீரர்களுக்கு ஆறுதலோடு, அவர்கள் மீண்டு வருவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுவது அவசியம்.
இலங்கை தொடக்க வீரர் திமுத் கருணரத்னே மற்றும் இலங்கை பவுலிங் பயிற்சியாளர் வாஸ் கூறும்போது, இலங்கை அணியின் முதல் தர கிரிக்கெட் வீரர்களை மெருகேற்றுவது அவசியம். அப்போது தான் இலங்கையின் வருங்கால கிரிக்கெட் சிறப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
இந்திய வீரர்கள் வெற்றி பெற்ற பிறகு கூறியது :
புஜாரா கூறியது : நாங்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தோம், வீரர்களுடன் ஜோடி சேர்த்து சிறப்பாக விளையாடி திறமைகளை வெளி படுத்தினோம் இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம்.
குலதீப் யாதவ் கூறியது : இந்த போட்டியில் நான் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அனைத்து வீரர்களும் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள், இந்த மைதானத்தில் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது இதனால் தான் அதிக விக்கெட்களை என்னால் எடுக்க முடிந்தது, அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்கள் இதனால் தான் நாங்கள் வெற்றிபெற்றோம் .