முதுகு வழியால் அவதி படும் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகினார். இன்னும் மூன்று மாதத்திற்கு கிரிக்கெட் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான காகிஸோ ரபாடா சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் போது சோர்வாக இருந்த காகிஸோ ரபாடாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை கண்டு பிடிக்கப்பட்டது.
“முதுகு வழியால் அவதி படும் காகிஸோ ரபாடா அடுத்த மூன்று மாதத்திற்கு கிரிக்கெட் விளையாடமாட்டார்,” என தென்னாபிரிக்கா அணியின் மேலாளர் முகமது மூஸாஜீ தெரிவித்தார்.

“ஜூலை மாதத்தில் தொடங்கும் இலங்கை தொடருக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள அவர் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது கிரிக்கெட் விளையாடாமல் இருக்கவேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.
அடுத்த சீசன் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டுடன் விளையாட இருந்தார். ஆனால், அதற்கு பதிலாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள ஐபில் தொடரில் இருந்து விலகினார் ரபாடா.