கேன் வில்லியம்சன் சாதரண பேட்ஸ்மேன் கிடையாது... குல்தீப் யாதவ வச்சு கேன் வில்லியம்சன கட்டுப்படுத்த முடியாது; இந்திய அணியை எச்சரித்த சுனில் கவாஸ்கர் !! 1
கேன் வில்லியம்சன் சாதரண பேட்ஸ்மேன் கிடையாது… குல்தீப் யாதவ வச்சு கேன் வில்லியம்சன கட்டுப்படுத்த முடியாது; இந்திய அணியை எச்சரித்த சுனில் கவாஸ்கர்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சனின் பங்களிப்பு நியூசிலாந்து அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு, நியூசிலாந்து அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, தற்போது மீண்டும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணி வலுவான அணி என்பதால் அரையிறுதி போட்டிக்கான இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை முன்னாள் இந்திய வீரர்கள் பலர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

கேன் வில்லியம்சன் சாதரண பேட்ஸ்மேன் கிடையாது... குல்தீப் யாதவ வச்சு கேன் வில்லியம்சன கட்டுப்படுத்த முடியாது; இந்திய அணியை எச்சரித்த சுனில் கவாஸ்கர் !! 2

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சனின் பங்களிப்பு நியூசிலாந்து அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் சாதரண பேட்ஸ்மேன் கிடையாது... குல்தீப் யாதவ வச்சு கேன் வில்லியம்சன கட்டுப்படுத்த முடியாது; இந்திய அணியை எச்சரித்த சுனில் கவாஸ்கர் !! 3

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “கேன் வில்லியம்சன் மிக சிறந்த பேட்ஸ்மேன். கேன் வில்லியம்சனின் காயத்தில் இருந்து தற்போது தான் முழுமையாக குணமடைந்திருந்தாலும், அவர் உலகக்கோப்பை தொடரின் பல போட்டிகளில் விளையாடாவிட்டாலும் எதுவுமே அவரது பேட்டிங்கை பாதிக்காது. நீண்ட நாட்களுக்கு பிறகு கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பியிருந்தாலும் அவர் நியூசிலாந்து அணிக்கான தனது வேலையை சரியாக செய்து அதிகமான ரன்களும் குவித்து வருகிறார். கேன் வில்லியம்சனின் பங்களிப்பு நியூசிலாந்து அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். கேன் வில்லியம்சனின் புட் ஒர்க் மிக சிறப்பாக இருப்பதால் அவர் குல்தீப் யாதவ் உள்பட இந்திய அணியின் எந்த பந்துவீச்சாளரையும் பார்த்து பயப்பட மாட்டார் என்றே கருதுகிறேன். குல்தீப் யாதவை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதும் கேன் வில்லியம்சனுக்கு தெரிந்திருக்கும். கேன் வில்லியம்சனின் பேட்டில் இருந்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய வீரர்கள் அவரை முடிந்தவரை பேட்டிங்கின் மறுமுனையிலேயே வைத்து கொள்ள வேண்டும். கேன் வில்லியம்சன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மிக சிறப்பான பார்மில் இருப்பதால் அவரை இந்திய அணி கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *