ஜனவரி 27ஆம் தேதி அன்று நடைபெற்ற ஐபில் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மாவை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்த ஐபில் சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியில் கரண் சர்மா விளையாடவுள்ளார்.
“எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது, தோனி தலைமையில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. தோனி ஒரு சிறந்த கேப்டன் மற்றும் வீரர்களிடம் இருந்து திறமையை வெளியே வர வைக்க அவருக்கு தெரியும். அவரின் தலைமையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்,” என கூறினார் கரண் ஷர்மா.
மேலும் சென்னை அணியில் விளையாட ஆர்வமாக இருக்கிறது எனவும், சென்னை வீரர்களிடம் இருந்து கற்று கொள்ள போகிறேன் எனவும் கூறினார்.
“சென்னை போன்ற சாம்பியன்ஸ் அணிக்காக விளையாட போகிறேன். சென்னை அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். நான் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்று கொள்வேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் வ்ரிஸ்ட் ஸ்பின்னர்கள் கலக்கி வருகிறார்கள். 2017-18 சீசனில் ஜூனியர் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக செயல் பட்டார். 30 வயதான கரண் ஷர்மா 2014ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல உதவி செய்தார். புனே அணிக்கு எதிரான இறுதி போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார் கரண் ஷர்மா. சுழற்பந்து வீச்சாளராக வளம் வரும் கரண் ஷர்மா, தேவை படும் போது கடைசி நேரத்தில் ரன் அடித்தும் தருவார்.
“நான் பல வருடமாக ஐபில் விளையாடி வருகிறேன் மற்றும் சில நுணுக்கங்களை கற்று கொண்டுள்ளேன். வித்தியாசமான சூழ்நிலையிலும் வித்தியாசமான வீரர்களுக்கும் எப்படி பந்து வீசுவது என்றும் கற்று கொண்டுள்ளேன்,” என தெரிவித்தார் கரண் ஷர்மா.