ஐ.பி.எல் தொடரை இந்த அணி தான் வெல்ல வேண்டும்; பீட்டர்சன் விருப்பம்
நடப்பு ஐ.பி.எல் தொடரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மிகபிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கிய இந்த தொடரை வெல்வதற்கு ஒவ்வொரு அணியும் கடும் போட்டி வருகின்றன.
இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடர் குறித்த தங்கள் கருத்துகள், கணிப்புகள் மற்றும் தங்களது விருப்பங்களை முன்னாள் வீரர்கள் பலரும் ஒவ்வொரு தொடரின் போதும் வெளிப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த தொடர் குறித்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் “இந்த தொடரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெல்ல வேண்டும்” என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “இந்த ஐ.பி.எல் தொடரை டெல்லி அணி வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் அதற்காக டெல்லி அணி தான் வெல்லும் என்று நான் சொல்லவில்லை, இது எனது விருப்பம் மட்டுமே. இதற்கு காரணம் என்னவென்றால் டெல்லி அணிக்காக நான் விளையாடிய தருணங்கள் மிக அழகானது, அந்த அணியின் உரிமையாளர்களும் என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
The @DelhiDaredevils are my team of choice for the @IPL.
I’m not saying they’re going to win the IPL, but I’d love them to.Why?
Cos I love the owner and Kiran deserves a trophy & cos I also had my best time at that franchise!
— Kevin Pietersen? (@KP24) April 9, 2018
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான கெவின் பீட்டர்சன் ஐ.பி.எல் தொடரில் டெல்லி, புனே உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.