தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர் ! 1
தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர்

ஐ.பி.எல் டி.20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியுடன் விளையாட உள்ளது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாண்டனர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர் ! 2

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை  கோடிகளை குவித்து எடுத்து கொண்டன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பொருந்திய அணியாக இந்த ஆண்டு களம் காண உள்ளது.

இதில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் சாட்னரை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர் ! 3

இந்நிலையில் தோனி தலைமையில் அவருடன் ஒன்றாக விளையாட உள்ளது குறித்து சாண்டனர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என வெகுநாள் ஆசை. மிகச் சிறந்த வீரரான தோனிக்கு எதிராக பவுலிங் செய்ய வேண்டும் என ஆசை. ஆனால் அதை விட பெரிய மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது.

தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர் ! 4

அதுதான் அவருடன் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது. அதோடு அவரின் வலை பயிற்சியின் போது நான் பவுலிங் செய்து பல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *