உமேஷ் யாதவுடன் சேர்ந்து வருங்கால இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார் என்று நினைத்த போது, காயங்கள் ஆரோனை நிறுத்த, இந்திய அணியில் முக்கிய வீரர் ஆனார் உமேஷ் யாதவ்.
உமேஷ் யாதவ் மற்றும் வருண் ஆரோன், இருவரும் ஒரே நேரத்தில் தான் முதல் ஒருநாள் போட்டியை விளையாடினார்கள். உமேஷ் யாதவ் சிறப்பாக விளையாட, காயங்கள் வருண் ஆரோனை நிப்பாட்டியது.
அக்டோபர் 23, 2011 அன்று தான் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார் வருண் ஆரோன். ஆனால், காயங்கள் அவரை விடவில்லை. முதுகு வலியால் இரண்டு வருடம் கழித்து ஜனவரி 25, 2014 அன்று மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இன்னொரு பக்கத்தில், காயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பந்து வீச்சீலும் கவனம் செலுத்தினார்.
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் 7.4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டை எடுத்தார் உமேஷ் யாதவ்.
பயிற்சி போட்டிகளில் விக்கெட் எடுத்தது மட்டும் இல்லாமல், எகானமி வீதத்தையும் குறைத்துள்ளார். ஆனால், இந்திய அணிக்கு மீண்டும் விளையாடவும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் வருண் ஆரோன்.
“எனக்கு பல காயங்கள் ஏற்பட்டது. நானும் உமேஷ் யாதவும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளோம், என்னை விட 2 வருடம் அவர் அதிகமாவே விளையாடியுள்ளார். எனக்கு இப்பொழுது 27 வயது தான், கிரிக்கெட் விளையாட இன்னும் பல ஆண்டுகள் இருக்கு. உமேஷ் யாதவ் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறார். எனக்கும் நல்ல நேரங்கள் காத்து கொண்டிருக்கிறது என நினைக்கிறன்,” என ஆரோன் கூறினார்.
“காயங்கள் ஏற்படுவது விளையாட்டில் ஒரு பகுதி தான். நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர்., இதனால் சில காயங்கள் எனக்கு ஏற்படும்,” என மேலும் அவர் கூறினார்.
கடந்த சில வருடங்களில் காயங்கள் குறைந்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.
“நான் கடந்த சில வருடங்களாக கடினமாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன், காயங்களும் குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு குதிகால் சோர்வு ஏற்பட்டது, கடந்த இரண்டு ஆண்டில் ஏற்பட்ட ஒரே காயம் அது தான். ஆனால், சில காயங்களை கட்டுப்படுத்த முடியும், சிலது முடியாது. என்னால் முடிந்த வரை நான் கட்டுப்படுத்துவேன்,” என மேலும் வருண் ஆரோன் தெரிவித்தார்.
தொடர்ந்து 150 கி.மி. வேகத்தில் போட கூடிய அவர், ரன்னையும் சில சமயத்தில் வாரி கொடுப்பார். இதை பற்றி கேட்ட போது,
“நான் எப்பொழுது விளையாடினாலும், விக்கெட் எடுக்க தான் நினைப்பேன். இதன் காரணத்தினால் நான் வேகமாக போடுவேன். சில சமயம் விக்கெட்டுகள் எடுப்பேன். சில சமயம் ரன்கள் கொடுப்பேன்,” என கூறினார்.