என்னதான் தோனியை பல விமர்சகர்கள் ஓய்வு பெற மறைமுகமாக வலியுருத்தி வந்தாலும், அவர்களுக்கு பதிலடுகொடுத்தார் போல் தான் உள்ளது தோனியின் ஒவ்வொரு செய்கையும். 2016 டி20 உலகக்கோப்பையின் இந்திய அணி அரயிறுதிப் போட்டியில் தோல்வியடந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அந்த போட்டி முடிவிற்குப் பின் அப்போதைய கேப்டன் தோனி தோல்வி குரித்து விளக்கம் அளிக்க பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிரூபர் ஓய்வு குறித்து கேள்வி கேட்க, அதனை அப்படியே திருப்பி சிக்சருக்கு அடித்தாற் போல அவரையே கூப்பிட்டு பக்கத்தில் அமர வைத்து கேள்விகள் மேல் கேள்வியாய்க் கேட்டு அப்படி கேட்கும் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலடி கொடுத்தார் ‘தல’.
அந்த தரமான சம்பவத்திற்குப் பின் அவரின் ஓய்வு குறித்து கேள்வி கேட்ட தயங்குகின்றனர் பத்திரிக்கையாளர்கள். அந்த சமயத்தில் அந்த பத்திரிக்கையாளரியட்ம் கேட்ட கேள்வி தான், நான் வேகமாக ஓடுகிறேனா? என்பது. அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. கேவி பழையதானாலும், அவரின் வேகம் இன்னும் புதிதாகத்தான் இருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது தோனி பேட்டிங் செய்து ஆடுகளத்தில் எவ்வளவு வேகமாக ஓடினார் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

குல்தீப் யாதவ் – தோனி ஜோடி ஆடிக் கொண்டிருக்கும் போது, தோனி ஒரு சிங்கில் தட்டி விட்டு ஓடுகிறார் அப்போது 38 வயதான மகேந்திர சிங் தோனி மணிக்கு 31 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறார், அதே நேரத்தில் மறு முனையில் ஓடும் 22 வயதான குல்தீப் யாதவ் வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ஓடுகிறார்.
இதனை பார்த்தல் தெரியும் தோனி இன்னும் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என.
Outrunning @msdhoni seems impossible! Catch the analysis on his ⚡️-quick runs on #NerolacCricketLive on Oct 13 on Star Sports. pic.twitter.com/rPbtbmsKES
— Star Sports (@StarSportsIndia) October 11, 2017

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் 4-1 என தொடரை இழந்து , அடுத்து முதல் டி20 போட்டியிலும் தோற்ற ஆஸ்திரேலிய அணி 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடருக்கு உயிர் கொடுத்துள்ளது. 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்த் டி20 தொடரையாவது கைப்பற்றி ஆருதல் தேடலாம் என முயற்சி செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி.
அதே நேரத்தில் இந்திய் அணி 2ஆவது டி20 போட்டியில் தோற்றாலும் 3ஆவது பொட்டியில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நிருத்த முற்படுகிறது.
இடையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தோல்பட்டை காயம் காரணமாக கடைசி இரண்டு டி20 போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு மாற்றாக கேப்டன் என டேவிட் வார்னர் செயல்பட்டு இந்திய சுற்றுப்பயனத்தின் 2ஆவது வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 3ஆவது போட்டி ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிக்கான உத்தேச அணி : விராட் கோலி(கேப்டன்), எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, சிகர் தவான், லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா