தயவு செஞ்சு சஞ்சு சாம்சன கேப்டன் பதவியில் இருந்து தூக்கிட்டு இவர கேப்டனாக்குங்க; ராஜஸ்தான் அணிக்கு கோரிக்கை வைக்கும் ஸ்ரீசாந்த் !! 1
தயவு செஞ்சு சஞ்சு சாம்சன கேப்டன் பதவியில் இருந்து தூக்கிட்டு இவர கேப்டனாக்குங்க; ராஜஸ்தான் அணிக்கு கோரிக்கை வைக்கும் ஸ்ரீசாந்த்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 16 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வருட ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது. அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் 19ம் தேதி நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த இரு தினங்களில் நடைபெற உள்ளதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரம் ஐபிஎல் தொடர் குறித்தே விவாதித்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் ஐபிஎல் ஏலம் குறித்தும்,ஒவ்வொரு அணிகள் குறித்தும் தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

தயவு செஞ்சு சஞ்சு சாம்சன கேப்டன் பதவியில் இருந்து தூக்கிட்டு இவர கேப்டனாக்குங்க; ராஜஸ்தான் அணிக்கு கோரிக்கை வைக்கும் ஸ்ரீசாந்த் !! 2

அந்தவகையில், அடுத்த வருட ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீசாந்த் பேசுகையில்ல், “என்னை பொறுத்தவரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சிஸ்டத்தையே மாற்றியாக வேண்டும். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது அந்த அணியின் நிர்வாகமே முழுமையானதாக இருந்தது. அப்போது ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.  அவரிடம் தெளிவான திட்டங்களும், தெளிவான ஒரு பார்வையும் எப்போதும் இருக்கும். நான் பார்த்த சிறந்த கேப்டன்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் சஞ்சு சாம்சனை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஜாஸ் பட்லரை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஜாஸ் பட்லர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த அனுபவமிக்கவர். அவரால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். ரோஹித் சர்மாவை போன்ற ஒருவரை தான் ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமிக்க வேண்டும். கேப்டனாக மட்டும் இல்லாமல் அணியின் வெற்றிக்கும் பங்களிப்பதே ஒரு கேப்டனின் வேலை. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் தனது அணிக்காக 4 போட்டிகளையாவது வென்று கொடுப்பவர் தான் கேப்டன் பதவிக்கு சரியானவர். ஆனால் சஞ்சு சாம்சன் மிக மிக குறைந்த போட்டிகளில் மட்டுமே தனது வேலையை செய்து கொடுக்கிறார். சஞ்சு சாம்சனை நம்பி இருக்கலாம் கேப்டனாக ஜாஸ் பட்லரை நியமிப்பதே ராஜஸ்தான் அணியின் எதிர்காலத்திற்கும் நல்லது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *