Cricket, India, Virat Kohli, Zaheer Khan

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அண்மையில் உலக அழகியாகப் பட்டம் வென்ற மனுஷி சில்லரும் கலந்துகொண்டனர்.

“எனக்கு விராட் கோலியை பிடிக்கும். அவர் பல சாதனைகளை புரிந்திருக்கிறார்,” என மனுஷி சில்லர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக விராட் கோலியைச் சந்தித்த மனுஷி சில்லர், தனது பேவரைட் கிரிக்கெட்டர் விராட்தான். அவர் செய்த சாதனைகள் ஏராளம் என்று புகழ்ந்து தள்ளினார். முடிவில் விராட் கோலியிடம், மனுஷி சில்லர் ஒரு கேள்வியை முன்வைத்தார். `இந்தத் தருணத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீங்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறீர்கள். சமூக முன்னேற்றத்துக்கு உங்களது பங்களிப்பையும் அளித்து வருகிறீர்கள். ஆனால், இளம் வயதினர் ஏராளமானவர்கள் உங்களைப் பின்பற்ற விழைகிறார்கள். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன’ என்ற கேள்வியை விராட் கோலிக்கு முன்வைத்தார் மனுஷி சில்லர்.

ஒரு கிரிக்கெட் வீரராகவும் மனிதராகவும்தான் முதிர்ச்சியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி பேசினார். அவர் கூறுகையில், ‘‘கிரிக்கெட் களத்தில் ஒரு வீரராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் எப்படி உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமான ஒன்று. உண்மையான உங்கள் உணர்வுகளைத் தன்மையாக வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், நீங்கள் நடிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதேபோல், ஒவ்வொருவரும், தங்களின் சொந்த அடையாளங்களை இழந்துவிடாமல் இருப்பது முக்கியம். நான் வேறு ஒருவராக இருக்க வேண்டும் என்று எப்போதும் முயன்றது கிடையாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் இதுவரை ஏற்பட்டதில்லை. வேறு ஒருவரைப்போல் நீங்கள் நடந்துகொள்ள முயன்றால், உங்களால் எப்போதும் வெற்றியை ருசிக்க முடியாது’’ என்றார்.

Cricket, India, Virat Kohli, Manushi Chhillar,

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *