தற்போது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் மத்தியூ ஹேடன் இந்தியாவில் நடக்கும் இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில் வர்ணனை செய்து வருகிறார். ஆஷஸ் தொடரை நீங்கள் மிஸ் பண்ணவில்லையா என ஒரு ரசிகர் கேட்டார், அதற்கு நச்சுனு பதில் அளித்தார் அதிரடி வீரர் மத்தியூ ஹேடன்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை டென்னிஸ் லில்லீயிடம் இருந்து பறித்தார் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வின் மற்றும் ஹேடன் இதற்கு முன்பு ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி உள்ளார்கள், இதனால் ட்விட்டரில் அஷ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தார் மத்தியூ ஹேடன்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதற்கு முன்பு அந்த சாதனையை டென்னிஸ் லில்லீ வைத்திருந்தார். இவரின் சூழலால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த நேரத்தில் ட்விட்டர் ரசிகர் ஒருவர் ஆஷஸ் தொடரை மிஸ் பண்ணவில்லையா? ஏன் இந்தியா – இலங்கை தொடரில் வர்ணனை செய்து கொண்டு இருக்கிறீரர்கள்? என கேட்டார்.
அதற்கு அட்டகாசமாக பதில் அளித்தார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மத்தியூ ஹேடன்.
கண்டிப்பாக ஆஷஸ் தொடர் தான் மத்தியூ ஹேடனை மிஸ் செய்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் கிடைத்த சிறந்த தொடக்கவீரர்களுள் ஒருவர் தான் மத்தியூ ஹேடன். மற்ற அணிகளை போலவே, இங்கிலாந்து அணியையும் அவர் பந்தாடி இருக்கிறார். 20 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 1461 ரன் அடித்திருக்கிறார், அதில் ஐந்து சதம் மற்றும் சில அரைசதங்கள் அடங்கும்.
ட்விட்டருக்கு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், மத்தியூ ஹேடனுக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றார்.