தல தோனி கிட்ட டியூசன் போங்க தம்பி… பாகிஸ்தான் கேப்டனுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் !! 1
தல தோனி கிட்ட டியூசன் போங்க தம்பி… பாகிஸ்தான் கேப்டனுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்து ஒரு கேப்டனுக்கான தகுதிகளையும், தேவையையும் கற்றுக்கொள்ளும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமதிற்கு., அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் அட்வைஸ் கூறியுள்ளார்.

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாக மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. செல்லும் இடம் எல்லாம் தோல்வி என்பது போல சின்ன சின்ன அணிகளிடம் கூட தோல்வியடைந்து வருகிறது.

தல தோனி கிட்ட டியூசன் போங்க தம்பி… பாகிஸ்தான் கேப்டனுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் !! 2

தற்போது நியூசிலாந்திற்கு சூற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இழந்த, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான முதல் டி.20 போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, டி.20 தொடரையும் தோல்வியுடன் துவங்கியுள்ளது.

தல தோனி கிட்ட டியூசன் போங்க தம்பி… பாகிஸ்தான் கேப்டனுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் !! 3

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது, முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். தவிர தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது சொந்த நாட்டு ரசிகர்களிடமே வெறுப்பை சம்பாதித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி குறித்தும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப், சர்பராஸ் அஹமது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்து ஒரு நல்ல கேப்டனுக்கான ஆலோசனைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தல தோனி கிட்ட டியூசன் போங்க தம்பி… பாகிஸ்தான் கேப்டனுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் !! 3

இது குறித்து முகமது யூசுஃப் பேசியதாவது “ என்னை பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் சர்பராஸ் அஹமது, முதலில்  தனது ஆரோக்கியத்திலும், தனக்கான தனிப்பட்ட போட்டி நுணுக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அதை அவர் செய்ய தவறும் பட்சத்தில் ஒரு அணியை அவரால் எப்படி வெற்றிகரமாக வழிநடத்த முடியும். அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியிடம் இருந்து சர்பராஸ் அஹமது நிச்சயம் நிறைய ஆலோசனைகளை கேட்டு பெற வேண்டும். ஒரு கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்து தனது அணியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற தோனியின் ஆலோசனைகள் சர்பராஸிற்கு நிச்சயம் உதவும், அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *