டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியக் கேப்டன்கள் பட்டியல்

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

இலங்கைக்கு எதிரான போட்டியில் வழக்கமாக தனது அழகான அதிரடியால் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல் மாற்றி தனது 19ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் இந்தியக் கேப்டன்கள் அடித்த டெஸ்ட் சதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் விராட்கோலி.

விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு 3 வருடம் தான் ஆகிறது. அதற்குள் இந்திய வரலாற்றில் உள்ள அனைத்து கேப்டன்கள் அடித்த சதத்தையும் துவம்சம் செய்துள்ளார். தனது அசால்டாக ஆடும் திறத்தால் மீண்டும் மீண்டும் புதிய புதிய சாதனைகளளை படைத்து வருகிறார் கேப்டன் கோலி.

5.எம்.எஸ் தோனி மற்றும் சௌரவ் கங்குலி – 5 சதங்கள்

இந்திய அணியின் ஆக்ரோச கேப்டன் சௌரவ்  கங்குலி தலைமையில் தான் இந்திய அணி வெளிநாடுகளிலும் வெற்றி பெறத் துவங்கியது. தனது கேபிடன்சிப்பில் மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளில் 21 டெஸ்ட் அபொட்டிகள் இந்திய அணிக்காக வெற்றி பெறச் செய்துள்ளார். அதில், மொத்தம் 5 சதங்கள் அடித்துள்ளார்.

அதே போல், அவருக்கு அடுத்த கேப்டனான் தோனியின் தலைமையில் தான் இந்திய அணி முதன் முதலில் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது. இஅவரது டெஸ்ட் கேப்டிடன்ஸ்யில் 27 போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். அதில் மொத்தம் 5 சதங்கள் அடித்துள்ளார்.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.