“தல” தோனி ஸ்டைல் வேற, “தளபதி” கோஹ்லி ஸ்டைல் வேற; கேரி கிறிஸ்டன்
முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன் ஸ்டைலில் இருந்து தற்போதைய கேப்டன் கோஹ்லியின் கேப்டன் ஸ்டைல் வித்தியாசமானது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியபோது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் தற்போது தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவரை ஐ.பி.எல் தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தனது பயிற்சியாளர்கள் பட்டியலில் சமீபத்தில் இவரையும் இணைத்தது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கேரி கிறிஸ்டன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கேப்டன் ஸ்டைலில் இருந்து தற்போது கேப்டன் கோஹ்லியின் கேப்டன் ஸ்டைல் மாறுபட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேரி கிறிஸ்டன் கூறியதாவது “ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கேப்டன் ஸ்டைலில் இருந்து தற்போதைய கேப்டன் கோஹ்லியின் கேப்டன் ஸ்டைல் மாறுபட்டது. ஆனால் திறமையை பொறுத்தவரையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. தென் ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணி வெற்றி பெற பல்வேறு யூகங்களை கையாள வேண்டும், விவேகத்தினால் மட்டுமே தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வெற்றி பெற முடியும். இந்திய அணி தேர்வில் எந்த குறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.