ஸ்டோக்ஸ் எடுத்தவுடன் தோனிக்கு போன் அடிச்சேன்.. அவரு என்ன சொன்னாருன்னா..? - காசி விஸ்வநாதன் பேட்டி! 1

பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டது பற்றி, தோனி என்ன சொன்னார்? என்பதை வெளியிட்டுள்ளார் காசி விஸ்வநாதன்.

கொச்சியில் நடந்த 2023 ஐபிஎல் மினி ஏலம் பல அணிகளுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. சில அணிகளுக்கு பணப் பற்றாக்குறை காரணமாக எதிர்பார்த்த வீரர்களை எடுக்க முடியாமல் முடிந்தது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் புதிய வரலாற்று படைத்துள்ளார் சாம் கர்ரன். அவரை பஞ்சாப் அணி 18.5 கோடி கொடுத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் தனி வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச ஏலத்தொகை இதுவாகும் அதற்கு அடுத்த அதிகபட்சமாக 17.5 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் க்ரீன் மும்பை அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் கட்டாயம் தேவையாக இருந்தது. அதற்காக முதலில் சாம் கர்ரனை எடுக்க கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை ஏலத்தில் கேட்டனர். ஆனால் கிடைக்கவில்லை என்பதால் விட்டுவிட்டனர். பின்னர் பென் ஸ்டோக்சை 16.25 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கின்றனர்.

அனுபவமிக்க ஆல்ரவுண்டர் மற்றும் வருங்கால கேப்டன் ஆகவும் இவரை பயன்படுத்தலாம் என்பதால் ஒட்டுமொத்தமாக அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்ட பிறகு தோனி அதற்கு என்ன சொன்னார்? என்பதை பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருந்தனர். தோனி என்ன கூறினார் என்பதை சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன். அவர் பேசியதாவது:

ஸ்டோக்ஸ் எடுத்தவுடன் தோனிக்கு போன் அடிச்சேன்.. அவரு என்ன சொன்னாருன்னா..? - காசி விஸ்வநாதன் பேட்டி! 2

“பென் ஸ்டோக்ஸ் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் தேவையாக இருந்தது. ஸ்டோக்ஸ் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. தோனியிடம் இதைப் பற்றி நான் கூறிய போது, அவரும் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பிறகு சிலவற்றை பேசினார். அதை என்னால் பொதுவெளியில் கூற முடியாது. நேரம் வரும்போது அவரே இதைப் பற்றி பேசுவார். தோனியின் வெளிப்படையை பலரும் அறிவோம். ஆகையால் உங்களுக்கு கட்டாயம் அது தெரிய வரும். மேலும், ஸ்டோக்ஸ் எதிர்கால கேப்டனாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதைப்பற்றியும் தோனி தான் முடிவு செய்ய வேண்டும்.” என பேசினார்.

ஸ்டோக்ஸ் எடுத்தவுடன் தோனிக்கு போன் அடிச்சேன்.. அவரு என்ன சொன்னாருன்னா..? - காசி விஸ்வநாதன் பேட்டி! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *