எப்பொழுது : மும்பை இந்தியன்ஸ் – இராஜஸ்தான் இராயல்ஸ், ஏப்ரல்22, இரவு 8 மணியளவில்
எங்கே : சவை மன் சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்
வானிலை என்ன : மழையினால் ஆட்டம் பாதிக்கப்படாது, நல்ல வானிலையே நிகழும்.
நேருக்கு நேர் : மும்பை 10 – இராஜஸ்தான் 6
மைதானத்தில் : மும்பை 2 – இராஜஸ்தான் 3
மும்பை இந்தியன்ஸ் : சூர்யகுமார் யாதவ், எவின் லீவிஸ், இஷான் கிஷான் (W), ரோஹித் ஷர்மா, கிருஷ்ண பாண்டியா, கியொரோன் போலார்ட், ஹார்டிக் பாண்டியா, மிட்செல் மெக்லெனகான், மாயன்க் மார்க்கண்டே, ஜாஸ் ப்ரிப்ரா, முஸ்தாபிசூர் ரஹ்மான், ராகுல் சாஹார், சவுராத் திவாரி , பேன் கட்டிங், பிரதீப் சாங்வான், ஜீன்-பால் டுமினி, தாஜீந்தர் சிங், ஷரத் லும்பா, சித்தீஷ் லேட், ஆதித்யா தாரே, அகிலா டான்ஜாயா, அனுகுல் ராய், மொஹ்சீன் கான், எம்.டி. நிதேஷ், ஆடம் மில்னே
இராஜஸ்தான் இராயல்ஸ் : ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஷீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட் காட், பென் லாஃப்லின், டி ஆர்சி ஷோர்ட், ஜோஃப்ரா, ஜான் பட்லர், ராகுல் டிராவிட், அஜிங்கியா ராகேன் (சி), ஹென்ரிக் க்ளாசென், ஆர்ச்சர், தவால் குல்கர்னி, அங்கிட் சர்மா, அனூரித் சிங், இஷ்சோதி, பிரசாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், மஹிபல் லோம்ரோர், ஆரியமன் பிர்லா, ஜடின் சக்ஸேனா, துஷ்மந்தா சமேரா
ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 22) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இருப்பினும் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. தன் வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ள மும்பை அணிக்கு, இராஜஸ்தான் உடனான இன்றைய போட்டி முக்கியத்துவம் வந்ததாக உள்ளது.
இதைப்போல் இராஜஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் சென்னை அணிக்கு எதிராக ஏற்பட்ட மோசமான தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் வெற்றிக்குப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இராஜஸ்தான் அணி உள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்திருந்தாலும், பெங்களூர் அணிக்கு எதிரான வெற்றி அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. சிறந்த வீரர்களை கொண்ட அணியாகவே உள்ளனர். இதனால் இவர்கள் விளையாடும் அணியில் மாற்றம் ஏற்படுத்த தேவையில்லை. இஷான் கிஷான் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். மேலும் ஈவின் லெவிஸ், ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டம் தொடரும்பட்சத்தில், அது இராஜஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
சென்னை அணிக்கு எதிராக இராஜஸ்தான் அணியின் சில முயற்சிகள், அந்த அணிக்கு பயனளிக்கவில்லை. க்ளாசனை துவக்க வீரராக களமிறக்கியது அந்த அணிக்கு எதிர்பார்த்த துவக்கத்தை அளிக்கவில்லை. இதனால் ராகுல் த்ருபதியை துவக்க வீரராக களமிறக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் ரஹானேவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அது மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.