ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் ஏற்பட்டுள்ள குழப்பம், இங்கிலாந்துக்கு சாதகம் என வார்னே தெரிவித்துள்ளார்.
மேத் வடே மற்றும் நெவில் ஆகியோரை புறந்தள்ளிவிட்டு டிம் பெய்ன்-க்கு இடம் அளித்ததற்கு முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளனர்.
கேமரூன் பேன்கிராஃப்ட்
13 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ததிலும், ஆஸ்திரேலிய அணியில் யாரை களம் இறக்குவது என்பதில் குழப்பம் நிலவுவதாலும், பிரிஸ்பேன் போட்டியில் இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னே கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி குழப்பமாக நிலவுகிறது. ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பராக பெய்ன்-ஐ தேர்வு செய்துள்ளது. அவரை சொந்த மாநில அணிக்கூட தேர்வு செய்யவில்லை. ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து முதல் போட்டிக்கு சிறந்த சூழ்நிலையுடன் சென்று கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்’’ என்றார்.
13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), 2. டேவிட் வார்னர் (துணை கேப்டன்), 3. கேமரூன் பான்கிராஃப்ட், 4. உஸ்மான் கவாஜா, 5. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 6. ஷான் மார்ஷ், 7. டிம் பெய்ன், 8. மிட்செல் ஸ்டார்க், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. ஜோஷ் ஹசில்வுட், 12. ஜேக்சன் பேர்டு, 13. சாட் சேயர்ஸ்.