2016-17 இல் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது, ஆனால் அந்த பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. இந்த செய்தி இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த பட்டியலில் 5 பேட்ஸ்மேன், 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 விக்கெட்-கீப்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், எந்த பிரிவிலும் இந்திய வீரர்கள் இல்லை.
உண்மையை சொல்ல போனால், இந்திய வீரர்கள் இதை பற்றி புகார் அளிக்க முடியாது. கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 931 ரன் அடித்து சிறப்பான பார்மில் இருந்தார், இவரை தவிர இந்திய வீரர்கள் யாரும் சிறப்பான பார்மில் இல்லை.
ஷிகர் தவான் 11 போட்டிகளில் 507 ரன், தோனி 12 போட்டிகளில் 386 ரன், யுவராஜ் சிங் 12 போட்டிகளில் 372 ரன்னும் அடித்திருக்கின்றனர். ஆனால், இந்த நேரத்தில் அதெல்லாம் சிறப்பாக ஆட்டம் என கருதமுடியாது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள 304 ரன் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் துணை-கேப்டன் டேவிட் வார்னர் தான் இந்த அணியின் கேப்டன். 22 இன்னிங்சில் விளையாடியுள்ளார் அவர் 1323 ரன் அடித்துள்ளார், அதில் 7 சதங்கள் அடங்கும்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்த சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்கள்:
டேவிட் வார்னர், ஜோ ரூட், பாப் டு பிளெஸ்ஸிஸ், பாபர் அசாம், குயின்டன் டி காக், ஹசன் அலி, அடில் ரஷீத், மிட்செல் ஸ்டார்க், ரஷீத் கான், லியாம் ப்ளன்கட், ஜோஸ் பட்லர், மத்தியூ வேட்.
இந்திய வீரர்களான விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான் ஆகிய நட்சத்திர வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.