தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஹசிம் ஆம்லா, கொல்பாக் டீலில் ஒப்பந்தம் செய்யமாட்டேன், தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடுவேன் என கூறினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக XI அணியில் விளையாட உள்ள ஹசிம் ஆம்லா, இந்த தகவலை தெரிவித்தார்.
இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு கொல்பாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என தகவல்கள் வந்தது. அந்த அணியில் இளைஞ்சர்கள் வந்து கொண்டே இருப்பதால், அது உண்மை என அனைவரும் நம்ப, பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து தொடருக்கு பிறகு முதல் முறையாக பயிற்சி செய்ய வந்த ஹசிம் ஆம்லா, இந்த தகவல் பொய்யென உறுதி செய்தார்.
ஆம்லாவுடன், மோர்னே மோர்கலையும் கொல்பாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க ஆங்கில நாடுகள் முயற்சி செய்கிறது என தகவல்கள் வந்தது. ஆனால், இது வரை அதை பற்றி தென்னாபிரிக்கா வீரர் மோர்னே மோர்கெல் பேசவில்லை.
இந்த கொல்பாக் ஒப்பந்தம் தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஏற்கனவே ரோஸோவ், அபாட், வைஸ் ஆகிய நட்சத்திர வீரர்களை தென்னாபிரிக்கா அணி இழந்தது.
செப்டெம்பர் 12, 13 மற்றும் 15 அன்று பாகிஸ்தான் மற்றும் உலக XI அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். மூன்று போட்டிகளும் லாஹூர் மைதானத்தில் விளையாடவுள்ளார்கள்.