இந்திய அணி தொடர்ந்து அடுத்தடுத்து மூவகையான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. ஒரு தொடர் கூட இழக்காமலும் வென்று எடுத்து வருகிறது. மேலும், ஒவ்வொரு வகையான போட்டிக்கும் ஒரு தனி அணியை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. சிகர் தவான், விராட் கோல்லி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தவிற மற்ற அனைத்து வீரர்களும் ஒரு வகையான போட்டியில் மட்டும் ஆடுகிறார்கள். அதே போல் சுழற்சி முறையிலும் வீரர்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால், ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணி இன்னும் சரியாக செட் ஆகாதது போல் தான் தெரிகிறது. மேலும், ஒருநாள் அணியில் உள்ள சில் ஓட்டைகளை கழைந்து 2019 உலகக் கோப்பைக்குள் ஒரு சரியான அணியை செட் செய்ய இந்த 5 வீரர்களை வைத்து பரிசோதனை செய்து வருகிரது.
அந்த நான்கு வீரர்களை தற்போது காண்போம்.
1.மணீஷ் பாண்டே
இந்த அணியின் மிடில் ஆடரில் இவரை செட் செய்ய இரண்டு தொடர்களகா இவருக்கு கொடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தாமல இருந்து வந்தார். இவரை மீண்டும் மீண்டும் அணியில் வைத்து எப்படியாவது அந்த இடத்தில் சேர்த்து விட்டால் அணிக்கு சரியான ஒரு வீரர் அடுத்த சில ஆண்டுகளுக்கு கிடைப்பார். தற்போது மணீஷ் பாண்டேவிற்கு 28 வயது தான் ஆகிறது. இந்த மிசில் ஆடரை சரியாக கையில் இவர் வைத்தார் எனில் அடுத்த இரண்டு உலகக் கோப்பைகளில் இவருக்கு அணியில் இடம் இருக்கும்.