தல தோனியாக மாற முயன்று அசிங்கப்பட்ட சர்பராஸ் அஹமத்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 1
தல தோனியாக மாற முயன்று அசிங்கப்பட்ட சர்பராஸ் அஹமத்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பிக்க தோனி போல முயற்சி செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் அஹமத் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

நியூசிலாந்திற்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்துடனான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் டி.20 போட்டியில் அபார பந்துவீச்சு மூலம் பாகிஸ்தானை 108 ரன்களில் கட்டுப்படுத்திய நியூசிலாந்து அணி, அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

தல தோனியாக மாற முயன்று அசிங்கப்பட்ட சர்பராஸ் அஹமத்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 2

இந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான சர்பராஸ் கான் சர்பராஸ் அஹமத் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஒரு பந்து சர்பராஸின் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதனால் ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பிக்க முன்பு ஒருமுறை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்ததை போன்று, நின்ற இடத்தில் இருந்து தனது கால்களை மட்டும் அகலமாக நீட்டினார். ஆனால் இதில் சர்பராஸ் கான் தோல்வியடைந்து தனது விக்கெட்டையும் இழந்தார்.

தல தோனியாக மாற முயன்று அசிங்கப்பட்ட சர்பராஸ் அஹமத்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 3
Sarfaraz Ahmed trolled by Twitterati for failing to copy MS Dhoni’s full split in PAK vs NZ, 1st T20I

இதனையடுத்து கம்பெடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன் ஆகிட முடியுமா என்ற நம்மூர் பழமொழியை போல், சர்பராஸ் அஹமதை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.

அதில் சில ;

https://twitter.com/MrK4mi/status/955340211881463808

Leave a comment

Your email address will not be published.