டெல்லி டேர்டெவில்ஸ் அணி, இந்த ஐ.பி.எல் தொடரில் சரியாக விளையாடவில்லை இருப்பினும் அந்த அணியை சேர்ந்த இளம் வீரர்கள் அவர்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தினார்கள்.
டெல்லி அணியை சேர்ந்த பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்கள்.
பண்ட் இந்த ஐபிஎல் தொடரின் பொது தனது தந்தையை இழந்தார் இருப்பினும் அவர் தனது திறமைகளை சிரிப்பாக வெளிப்படுத்தினார், பருவத்தின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
இந்த தொடரில் அவர் 14 போட்டிகளில் மொத்தம் 366 ரன்கள் குவித்தார், இந்த ஐபிஎல் போட்டிகள் முடிவில் பண்ட் 165 ஸ்ட்ரைக் ரேட் வைத்து உள்ளார். மேலும் அவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 97 ரன்கள் அடித்து டெல்லி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
ஐபிஎல் மட்டும் இல்லாமல் ரஞ்சி ட்ரோபியிலும் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளி படுத்தி வருகிறார்.
தற்போது பண்ட் அவருக்கு மிகவும் பிடித்த பென்ஸ் கார் ஒன்றை வாங்கி உள்ளார்,அதை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.