முன்பு போல் இல்லாமல், தற்போது ரசிகர்களுக்கு வலைத்தளங்களில் அவர்களுக்கு பிடித்த வீரர்களிடம் பேச வாய்ப்பு இருக்கிறது. இதனால், பல ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்த வீரர்களுடன் பேச வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறார். ஆனால், சில ரசிகர்கள், அதான் நேரம் என்று சில வீரர்களை கலாய்த்து பதிவிடுகின்றனர்.
இந்த மாதிரி சம்பவம் தான் தற்போது ட்விட்டரில் நடந்தது. அவரது நிதானத்தை இழந்து விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பார்திவ் பட்டேலிடம் வாயாடினார்.
இந்தியா மற்றும் இலங்கை போட்டியின் போது, ஹாங்காங்கில் இருக்கும் பார்திவ் பட்டேல், அந்த போட்டியை இணையதளத்தில் பார்க்க முடியுமா என ட்வீட் செய்தார்.
இந்த பதிவை கண்டா ஒரு ரசிகர், கிரிக்புஸில் பார்க்க சொல்லி, ஹிந்தி மொழியில் ஆபாசமாக பேசியுள்ளார்.
அதை கண்ட பார்திவ் பட்டேல், தயங்காமல் மறுபடியும் பதிலளித்தார்.
“BHAI Sidha Sawal pucha tha..usme gali dene ki kya jarurat thi?ghar pe bhi ese hi baat karte Ho aap?” பதிவிட்டிருந்தார்.
அதாவது,”நான் சும்மா ஒரு கேள்வி தன கேட்ட, அதுக்கு ஆபாசமான வார்த்தையை உபயோகப்படுத்தறீங்க. உங்க வீட்லயும் இப்டி தான் பேசுவீங்களா,” என ட்வீட் செய்தார்.
சிறிது நேரத்தில் பார்திவ் பட்டேலுடன் சேர்ந்த இர்பான் பதான், அந்த ட்விட்டர் உபயோகிக்கு அறிவுரை கூறினார்.