1 வருடம் கழித்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாட போகிறார் பார்திவ் பட்டேல். இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் வ்ரிதிமான் சாஹாவுக்கு பக்க சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவரால் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என தகவல் வந்தது. இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட்-கீப்பராக பார்திவ் பட்டேல் செயல் படுவார்.
அவர் கடைசியாக இந்திய அணிக்காக 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக விளையாடினார். காயத்தில் இருந்து சாஹா மீண்டு வந்ததும், மீண்டும் பார்திவ் பட்டேலை வெளியே உட்கார வைத்தார்கள்.
ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அவரது அணிக்கு முதல் ரஞ்சி கோப்பையை வாங்கி கொடுத்தார் பார்திவ் பட்டேல், ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் இல்லை. கடந்த ஏழு மாதமாக, ஜூனியர் இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்து கொள்ள வில்லை. கடைசியில் ஜூனியர் இந்திய அணியின் தேர்வாளர்கள் வேறு வழி தெரியாமல் பார்திவ் பட்டேலை அழைத்தார்கள்.
இந்திய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பாதுகாப்புக்காக இரண்டு விக்கெட்-கீப்பரை அழைத்து செல்லும். இதனால், தென்னாபிரிக்கா தொடரில் பார்திவ் பட்டேல் இருப்பது உறுதி ஆனது. இப்போது அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவார் என தகவல் வந்தன. அவர் இந்த போட்டியில் ரன் அடித்தால், அவரது இடத்தை உறுதி செய்து அடுத்த போட்டியிலும் அவர் விளையாடுவார். முதல் டெஸ்ட் போட்டியில் வ்ரிதிமான் சாஹா சொல்லிக்கொள்ளும் படி பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட்-கீப்பிங்கில் பார்திவ் பட்டேல் சிறப்பாக செயல் பட்டாலும், இந்திய அணி அவரிடம் இருந்து நல்ல பேட்டிங்கை எதிர்பார்க்கும். இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 13ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெறும்.