உங்களுக்கு தோனி பயன்படுத்தும் பேட்டின் விலை என்னவென்று தெரியுமா? 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அவர்கள், விளையாட்டு உலகில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்ப மற்றும் மதிக்கக்கூடிய நபர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

இவர் திறமையான கேப்டன் என்பதற்கு இவர் வென்ற மூன்று ஐ.சி.சி. கோப்பைகளே சான்று. ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராப்பி கோப்பை ஆகிய மூன்றையும் உலக அளவில் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இவர் கிட்டதட்ட  பத்து ஆண்டுகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். அவர் ஒவ்வொரு வருடமும் சிறந்த கேப்டனாக மெருகேறுவதை இந்த உலகம் பார்த்துக்கொண்டே இருந்தது.

ஜார்க்கண்ட் பல பிராண்டுகளுக்கு பிரபலமானதாகவும் உள்ளது. தோனி பிரபலமான சிறந்த விளையாட்டு வீரராக உள்ளார். அவர் பல ஆண்டுகளாக பல பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து வருகிறார். தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு ஆளுமைகளில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆட்டத்தின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

உங்களுக்கு தோனி பயன்படுத்தும் பேட்டின் விலை என்னவென்று தெரியுமா? 2

அவரது ரசிகர்களின் கூட்டம் இந்தியாவில் மிக சிறப்பான ஒன்றாக உள்ளது. அதனால்தான் அவர் விளையாடும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

ரீபோக், டி.வி.எஸ் மோட்டார்ஸ், பெப்சிகோ, முத்தூட் குரூப், பாரத் பெட்ரோலியம், ஹீரோ, டைட்டன் சொனாட்டா, மைசூர் சாண்டல், ரிலையன்ஸ் குரூப்ஸ் போன்ற பல பிரபலமான பிராண்டுகளை தோனி விளம்பரம் செய்து உள்ளார்.

தோனியின் விளையாட்டு உபகரணங்களுக்கான ஸ்பான்சராக ஸ்பார்டன்

நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

தோனி ஸ்பார்டன் நிறுவனத்துடன் 25 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்

தோனி ஸ்பார்டன் நிறுவனத்துடன் 25 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது, கிரிக்கெட் வீரர்களின் மிகப்பெரிய தொகைக்கான ஒப்பந்தமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி 100 கோடிக்கு எம்.ஆர்.ஃப். நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார். விராத் கோலி அந்த நிறுவனத்துடன் 8 ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவளைத்தலங்களின் வளர்ச்சி காரணமாக ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களின் தனிப்பட்ட பல விவரங்களை எளிதாகவும், வேகமாகவும் தெரிந்துக்கொள்கின்றனர்.

உங்களுக்கு தோனி பயன்படுத்தும் பேட்டின் விலை என்னவென்று தெரியுமா? 3

இருப்பினும், பெரும்பாலான ரசிகர்களுக்கு, மகேந்திர சிங் தோனி தன்னுடைய ஒரு பேட்டிற்கு, எவ்வளவு செலவு செய்கிறார் என்பது தெரியாது

தோனி அதிக எடையுடைய பேட்டை விளையாட உபயோகப்படுத்துவார் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. ஆனால் அந்த பேட்டின் விலை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

ஸ்பார்டன் நிறுவனத்தின் தகவல்களின்படி, தோனியின் ஒவ்வொரு பேட்டிற்கும் கிட்டதட்ட ரூ 32,000 செலவாகிறது என்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *