விராட் கோலி, ரோஹித் சர்மா அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவது ஏன்..? மவுனம் கலைத்த இந்திய அணியின் பயிற்சியாளர் !! 1
விராட் கோலி, ரோஹித் சர்மா அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவது ஏன்..? மவுனம் கலைத்த இந்திய அணியின் பயிற்சியாளர்

தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம்பெறாதது குறித்தான தனது கருத்தை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள்  போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவது ஏன்..? மவுனம் கலைத்த இந்திய அணியின் பயிற்சியாளர் !! 2

தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இதனால் டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும் செயல்பட உள்ளனர்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடரில் இடம்பெறாததால் இந்திய அணியில் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தென் ஆப்ரிக்கா அணியுடனான லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே ஓபனாக பேசியுள்ளார்.

இது குறித்து பராஸ் மாம்ப்ரே பேசுகையில், “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடருக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என எடுத்து கொள்ள கூடாது. அனைத்து வீரர்களுக்கும் சரியான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அணி கவனமாக செயல்பட்டு வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிக சிறந்த வீரர்கள். அவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயமே இல்லை. தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடரில் அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களின் திறமையை பரிசோதித்து பார்ப்பப்தற்காகவே தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில்  சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *