Cricket, Most T20I Centuries, Colin Munro, Martin Guptill, T20I

சர்வதேச டி20 போட்டி 2005ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை பிரமாண்டமாக நடந்து வருகிறது. டி20 போட்டிகள் அறிமுக படுத்திய சில நாட்களிலேயே கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தது. டி20 கிரிக்கெட் என்றாலே அது பேட்ஸ்மேனின் கேம் என்று நாம் அனைவருக்குமே தெரியும். இதுவரை பல வீரர்கள் சதம் அடித்திருக்கிறார்கள். இதில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

கிளென் மேக்ஸ்வெல் – 2

Cricket, India, Sri Lanka, Most runs in Boundaries

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் இதுவரை இரண்டு சதம் அடித்திருக்கிறார். முதல் சதம் 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும், இரண்டாவது சதம் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அடித்தார்.

ரோஹித் சர்மா – 2

அதிக டி20I சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியல் 1

இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியிடமும் , 2017ஆம் ஆண்டு இலங்கை அணியிடமும் அடித்திருக்கிறார்.

எவின் லெவிஸ் – 2

அதிக டி20I சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியல் 2

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் எவின் லெவிஸ் இது வரை இரண்டு சதம் அடித்திருக்கிறார். இரண்டுமே இந்திய அணிக்கு எதிராக அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெய்ல் – 2

Cricket, Most T20I Centuries, Colin Munro, Martin Guptill, T20I

வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 கிங் கிறிஸ் கெய்ல் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும், 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கிறார்.

மார்ட்டின் குப்தில் – 2

Cricket, India, Rohit Sharma, Fastest ODI 200s, Virender Sehwag

நியூஸிலாந்து அணியின் அதிரடி தொடக்கவீரர் மார்ட்டின் குப்தில் இது வரை இரண்டு சதம் அடித்திருக்கிறார். 2012ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கிறார்.

பிரண்டன் மெக்கல்லம் – 2

Cricket, Most T20I Centuries, Colin Munro, Martin Guptill, T20I

நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடனும், 2012ஆம் ஆண்டு வங்கதேச அணியுடனும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

கோலின் முன்றோ – 3

அதிக டி20I சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியல் 3
MOUNT MAUNGANUI, NEW ZEALAND – JANUARY 03: Colin Munro of the New Zealand Black Caps bats during game three of the Twenty20 series between New Zealand and the West Indies at Bay Oval on January 3, 2018 in Mount Maunganui, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

நியூஸிலாந்து அணியை சேர்ந்த அதிரடி வீரர் கோலின் முன்றோ சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். வங்கதேசம், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் தலா ஒரு சதம் அடித்திருக்கிறார் முன்றோ.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *