டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் செதேஸ்வர் புஜாரா, அனைவரிடமும் பாராட்டுகளை வாங்குகிறார்.
நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் புஜாரா, தன் கேப்டன் விராட் கோலியிடமே பாராட்டை பெற்றார். ஆனால், தற்போது கேப்டன் விராட் கோலி மற்றும் தொடக்கவீரர் ஷிகர் தவானை விட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் செதேஸ்வர் புஜாரா தான் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நாம் அவ்வுளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அதான் காரணம். அனைத்தும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிதான் என்று இருக்கிறோம். ஆனால், டெஸ்ட் போட்டி என்று வந்தால் புஜாரா தான் சிறந்த வீரர். கோலி, தவானை விட சிறப்பாக விளையாடுகிறார்,” கம்பிர் கூறினார்.
ஒரே விதமான போட்டியில் விளையாடுவது தான் செதேஸ்வர் புஜாராவுக்கு உதவி அளிக்கிறது என கம்பிர் மேலும் கூறினார்.
“அவர் சிறப்பான வீரர் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் ஒரே விதமான போட்டி விளையாடுவதால், அவருக்கு டெஸ்ட் போட்டி எளிதாகி விட்டது. கவுண்டி கிரிக்கெட் விளையாடுவது அவருக்கு உதவியாக இருக்கிறது. இந்தியாவில் சிவப்பு-பந்துகளை காண்பது கடினம், அதுவும் முக்கியமாக இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டிருக்கும் போது,” என கம்பிர் கூறினார்.
“இந்திய அணி நிறைய வெள்ளை-பந்துகளில் தான் விளையாடுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடவில்லை என்றால், கவுண்டி கிரிக்கெட் விளையாடுவது தான் சரி. கடினமான இங்கிலாந்து நிலைமையில் விளையாடி விட்டால், இது போன்ற இலங்கை அணியுடன் விளையாடுவது எளிதாகி விடும்,” என கம்பிர் மேலும் தெரிவித்தார்.