11வது வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வராத காரணத்தினால், சென்னையில் ஐபில் போட்டிகள் நடக்க கூடாது என்று அரசியல் காட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்கள் சில சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களையும் தாக்கினார்கள்.
பிரச்னையை வளர்க்க கூடாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஆட உள்ள போட்டிகளை வேறு மைதானத்தில் விளையாட ஐபில் கவுன்சில் முடிவு எடுத்தது. அதன் பிறகு சென்னை அணிக்கு புனே மைதானத்தை ஒதுக்கினார்கள்.
முன்னதாக, இந்த வருட ஐபில் தொடரில் பிளே-ஆப் சுற்றின் இரண்டு போட்டிகள் புனேவில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது சென்னை அங்கு விளையாடவுள்ளதால், பிளே ஆப் போட்டிகளை வேறு மைதானங்களுக்கு மாற்ற ஐபில் கவுன்சில் முடிவு எடுத்துள்ளது.
“ஆமாம், புனேவில் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறாது. இன்னும் ஓரிரு நாட்களில் பிளே-ஆப் நடைபெறும் மைதானத்தை முடிவு செய்வோம்,” என ஐபில் தலைவர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.
ஆனால், மே 23 2மற்றும் 5 அன்று பிளே-ஆப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது சரியாக தெரியவில்லை. மேலும், கொல்கத்தா அல்லது லக்னோ ஆகிய மாநிலத்தில் இருக்கும் மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டும் இல்லாமல், பிளே-ஆப் சுற்று போட்டிகளை நடந்த ராஜ்கோட் மைதானமும் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கு முன்பு பிளே-ஆப் சுற்று போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்த கொல்கத்தா நடத்த வாய்ப்புள்ளது. இதனால், மே 27ஆம் தேதி நடக்கவுள்ள ஐபில் இறுதி போட்டிக்கும் விரைவில் செல்ல எளிதாக இருக்கும்.
“அதை பற்றி தான் பேசி வருகிறோம். அதற்கான முடிவு விரைவில் வெளிவரும்,” என ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளை நடந்த மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் விறுவிறுப்பாக வேலையை பார்த்து வருகிறது. கடந்த வருடம் ஐபில் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி இறுதி போட்டிக்கு சென்றதால், அந்த அணியின் சொந்த மண்ணில் பிளே-ஆப் சுற்று போட்டிகளை நடந்த திட்டமிட்டு இருந்தது ஐபில் கவுன்சில்.