ரஞ்சி டிராபி போட்டியில் மீண்டும் பார்முக்கு வந்து 99 ரன் அடித்த இளம் டெல்லி வீரர் ரிஷப் பண்ட், ரன் அடிக்காத போது எனக்கு எந்த பிரஷரும் இல்லை என கூறினார்.
கடந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தலைப்பு செய்தியாக வந்தார் 20 வயது இளம் வீரர் ரிஷப் பண்ட். ரஞ்சி டிராபி போட்டியில் கடந்த வருடம் 326 பந்துக்கு 308 ரன் அடித்த பிறகு வெளிச்சத்திற்கு வந்தார் ரிஷப் பண்ட். அதன் பிறகு ஜார்கன்ட் அணிக்கு எதிராக 48 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், முதல்-நிலை கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியன் என்ற பெருமையை பெற்றார் பண்ட். கடந்த வருடம் ரஞ்சி டிராபி போட்டியில் 8 போட்டிகளில் விளையாடிய பண்ட் நான்கு சதம் மற்றும் சில அரைசதம் அடிக்க அந்த சீசனில் 972 ரன் அடித்தார். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால், இந்திய அணிக்கு அறிமுகம் ஆகி பேட்டிங் விளையாட முடியவில்லை. அதன் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணிக்கு ஸ்டான்ட்-பை வீரர்கள் பட்டியலில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகம் ஆனார் பண்ட், ஆனால் முதல் போட்டியில் அவரது ரசிகர்களை ஏமாற்றி விட்டார். அதன் பிறகு இந்த ரஞ்சி டிராபியில் மீண்டும் பார்முக்கு வந்து மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 99 ரன் அடித்தார்.
“எனக்கு எந்த பிரஷரும் இல்லை, ஆனால் எதற்கு நான் நிம்மதியாக இருக்க வேண்டும்? இது கிரிக்கெட், நல்ல நாளும் இருக்கும், கெட்ட நாளும் இருக்கும். தனக்கு தானே பிரஷர் ஏற்படுத்தி கொண்டால், அடுத்து வரும் போட்டிகளில் ஒழுங்காக விளையாட முடியாது. சில நாள் நாம் ரன் அடிக்கலாம், சில நாள் நாம் ரன் அடிக்காமலும் போகலாம். இது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை,” என பண்ட் கூறினார்.
“சீனியர் வீரர்களிடம் இருந்து கற்று கொள்ளலாம். இந்திய அணிக்காக நான் நான் நேரங்களை செலவழிக்கும் போது, நிறைய கற்றுள்ளேன். இங்கும் அனுபவம் வாய்ந்த கம்பிர் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். இதை கற்று கொள்ள இந்த வயது இருக்க வேண்டும் என்று இல்லை. எவ்வுளவு விரைவில் கற்று கொள்கிறோமோ, அவ்வுளவு விரைவில் கிரிக்கெட் வீரராக ஆகலாம்,” என பண்ட் மேலும் தெரிவித்தார்.
“ஒரு போட்டி உங்களுக்கு ரன் கொடுக்கும், அதிலேயே ஒட்டி கொண்டிருந்தால், நிறைய ரன் அடிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும். அணிக்காக ரன் அதிகமாக அடிப்பதில்லை என நான் வருத்தப்படுகிறேன். ஆனால், என் ஆட்டத்தை மாற்றி கொள்ளும் படி நான் வித்தியாசமாக அவுட் ஆனதில்லை,” என ரிஷப் பண்ட் மேலும் கூறினார்.