டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ள அஸ்வினை யாரும் கொண்டாடவில்லையே ஏன்? என ஆகாஷ் சூப்பரா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடைபெற்று வரும் பாடருக்கு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் இவர் வீழ்த்திய 5 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இவை ஒருபுறம் இருக்க, டெஸ்ட் அரங்கில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை மற்றும் மைல்கல்லை எட்டியுள்ளார் அஸ்வின். இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது பந்துவீச்சாளராக அஸ்வின் இருக்கிறார்.
அஸ்வினின் இத்தகைய சாதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடத்தக்கவை, ஆனால் பெரிதளவில் யாரும் கண்டு கொள்ளவில்லையே ஏன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பலரும் நெருங்க முடியாத சாதனையை அஸ்வின் படைத்திருக்கிறார். இதற்காக அவரை நாம் கொண்டாடி தீர்த்திருக்க வேண்டும் கொண்டாடவில்லையே ஏன்?. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஓபனிங் பேட்டிங் எப்படி கொண்டாடப்பட வேண்டுமோ, அதே அளவிற்கு அஸ்வின் சாதனை கொண்டாடப்பட வேண்டும். இந்திய அணி உருவாக்கிய தலைசிறந்த பவுலர்கள் மற்றும் இறுதிவரை போராடி வெற்றியை பெற்றுதரக்கூடியவர்களில் ஒருவர் அஸ்வின். முன்பு அனில் கும்ப்ளே இருந்தார். இப்போது அஸ்வின் செய்கிறார்.”
“இந்திய மைதானங்களில் சுழல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினாலே விக்கெட் விழுந்து விடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. அணியில் கிட்டத்தட்ட நான்கு சுழல் பந்துவீச்சார்கள் இருந்தும் மற்றவர்களைவிட அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்றால் அது அவரது திறமை.”
வித்தியாசமான கண்டிஷன்கள் மற்றும் வித்தியாசமான பேட்ஸ்மேன்கள் என மாறிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த சூழலிலும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இது அனைத்து சுழல் பந்துவீச்சாளர்களாலும் செய்துவிட முடியாத ஒன்று. குறிப்பாக இந்த காலகட்டத்தில் இந்திய மைதானங்களில் எப்படி ஆட வேண்டும் என்று நன்றாக கற்றுக்கொண்டு வருகிறார்கள். இப்படியொரு சூழ்நிலையிலும் அவர் விக்கெட்டுகளை எடுக்கிறார் என்பது தான் அவரது திறமையின் உச்சத்தை குறிக்கிறது.” என்றார்.