ஆஸ்திரேலியாவை வச்சு செய்ய அஸ்வினுக்கு மீண்டும் இடம் கொடுக்கப்படுமா..? ஓபனாக பதில் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா !! 1
ஆஸ்திரேலியாவை வச்சு செய்ய அஸ்வினுக்கு மீண்டும் இடம் கொடுக்கப்படுமா..? ஓபனாக பதில் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்தான  கேள்விக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஓபனாக பதில் கொடுத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அஹமதாபாத் மைதானத்தில் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகமாக நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியாவை வச்சு செய்ய அஸ்வினுக்கு மீண்டும் இடம் கொடுக்கப்படுமா..? ஓபனாக பதில் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா !! 2

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா இல்லையா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஓபனாக பதில் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை வச்சு செய்ய அஸ்வினுக்கு மீண்டும் இடம் கொடுக்கப்படுமா..? ஓபனாக பதில் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா !! 3

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “ஆடும் லெவனை நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆடுகளத்தின் தன்மையை ஆய்வு செய்த பிறகே அதற்கு ஏற்ப ஆடும் லெவனை தேர்வு செய்வோம் என்பதால் அஸ்வினுக்கு இடம் கொடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் எங்களது முழு பலத்துடன் தான் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வோம். இறுதியான ஆடும் லெவனை போட்டி நடைபெறும் 19ம் தேதி தான் முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *