Cricket, India, Australia, Test Wickets, Ravichandran Ashwin, Ravindra Jadeja, Nathan Lyon

ஜடேஜாவை தடை செய்த அடுத்த நாள் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குறித்து வருத்தம் தெரிவித்து செய்த வெளியிட்டுள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கொலும்புவில் நடைபெற்றது. அந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்யாசத்தில் தோற்க்கடித்தது. நான்காவது நாளே இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தது குறிப்பிடதக்கது.

முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது. இந்த இரு டெஸ்ட் போட்டியிளும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ரவிந்திர ஜடேஜா.

ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 70* ரன்கள் அடித்ததுடன் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் 5-விக்கெட் வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடதக்கது.

அந்த போட்டியில் அவருடைய சிறப்பான செயல்பாட்டிற்காக அவருக்கு ஆட்ட நாயகன்  விருதும் வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது பெற்றாலும் அவரால் ஒரு நாள் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜடேஜாவை அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது.

ஒரு போட்டி தடை: ICCஐ விளாசிய ஜடேஜா 1

அவர் ஐசிசியின் ஒழுங்கு விதிமுறைகளை இரண்டாவது முறையாக மீறியதற்காக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது. ஆட்ட நாயகன் விருது பெற்ற அடுத்த நாளே இத்தடை விதித்ததால் அவரால் ஆட்ட நாயகன் விருதைக் கூட மகிழ்ச்சியாக கொண்டாடவில்லை.

ஒரு போட்டி தடை: ICCஐ விளாசிய ஜடேஜா 2

ஐசிசியின் ஒழுங்குமுறை விதிப்படி ஒருவர் மீது அவறை அச்சுருத்தும் வகையில் ஏதாவது பொருளை அல்லது பந்தை கொண்டு எறிந்தாலோ அல்லது எறிய முற்பட்டாலோ அது ஐசிசியின் விதியை மீறி செயலாகும்.

ஐசிசியின் விதிதை 6 மாதத்திற்க்குள் இரண்டு முறை மீறினால் அவருக்கு தலா ஒரு முறைக்கு மூன்று தவறான புள்ளிகள் வழங்கப்படும்.

அவ்வாறு வழங்கப்படும் ஆறு தவறான புள்ளிகள் பெற்றால் அவர் அடுத்த ஒரு டெஸ்ட் போட்டி விளையாட தடை செய்யப்படுவார்.

ஒரு போட்டி தடை: ICCஐ விளாசிய ஜடேஜா 3

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா பந்தை கருணாரத்னே அவருக்கே திருப்பி அடிக்க அதை பிடித்த ஜடேஜா வேகமாக ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். இதனால் பயந்தது போல் கருணாரத்னே திரும்பி நின்றுவிட்டார். அவரைத் தாண்டிய பந்து சகாவின் கையில் பட்டு தெறித்து பின்பக்கம் ஓடியது.

இதை பார்த்த ஆட்ட நடுவர் சர் ரிச்சி ரிச்சர்ட்சன் ஜடேஜாவின் விதிமீறலை ஐசிசியில் முறையிட்டார். இதனை ஆலோசித்த ஐசிசி ஜடேஜாவை ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது.

ஒரு போட்டி தடை: ICCஐ விளாசிய ஜடேஜா 4

இதனால் வருத்தம் அடைந்த ஜடேஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“நாம் சிறந்து விளங்கும் போது, உலகம் நமக்கெதிறாக மாறும் நியதி நடக்கிறது” என் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *