இந்தியாவில் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை கண்டுபிடிக்க இந்தியன் பிரீமியர் லீக் தான் உதவி செய்கிறது. ஆனால், அதே நேரத்தில் இந்திய ரசிகர்களுக்கு இடையே சண்டை உருவாக்க, அதே இந்தியன் பிரீமியர் லீக் தான் காரணமாய் இருக்கிறது.
செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அந்த அணியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் மீண்டும் திரும்பி உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்க பட்டுள்ளது.
“இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்க பட்டுள்ளது,” என தேர்வாளர் பிரசாத் கூறினார்.
இந்த இந்திய அணி சிறப்பாக இருந்தும், சில ரசிகர்கள் 16 கொண்ட அணியில் ஆர்.சி.பி வீரர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் என கூறுகிறார்கள்.
இந்திய அணியில் நான்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் உள்ளார்கள் – விராட் கோலி, லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால். ஆனால், கேதார் ஜாதவ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் படி கடைசி சில போட்டிகளில் விளையாடவில்லை.
இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெறாததால், ஆர்.சி.பி கோட்டா என அனைவரும் கலாய்த்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. ஒருநாள் போட்டிகள் சென்னை, கொல்கத்தா, இண்டோர், பெங்களூரு மற்றும் நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் மூன்று டி20 போட்டிகளுடன் முடிகிறது.
இந்திய அணி : விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி