இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 1

இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 20-வது டெஸ்ட் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரே நாளில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் டெல்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 2

முதலில் விஜய் சதமடிக்க, அதன்பின்பு விராட் கோலியும் சதமடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இது அவருடைய 20-வது டெஸ்ட் சதமாகும்.

குறைந்த இன்னிங்ஸில் 20 டெஸ்ட் சதங்கள் 

55 இன்னிங்ஸ் – பிராட்மேன்
93 இன்னிங்ஸ் – கவாஸ்கர்
95 இன்னிங்ஸ் – ஹேடன்
99 இன்னிங்ஸ் – ஸ்டீவன் ஸ்மித்
105 இன்னிங்ஸ் – விராட் கோலி இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 3

அடுத்தடுத்த இன்னிங்ஸில் அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் 

3 – கோலி – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014/15
3* – கோலி, இலங்கைக்கு எதிராக, 2017/18
2 – ஹசாரே, கவாஸ்கர், அசாருதீன், சச்சின், டிராவிட்.இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 4

* மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் சதங்கள் அடித்த முதல் கேப்டன் – கோலி.

* 2 முறை தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸில் சதங்கள் அடித்த முதல் கேப்டன் – கோலி.

* 2002-ல் டிராவிட் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸில் சதமெடுத்தார். அதன்பிறகு இப்போதுதான் கோலி தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸிலும் சதமெடுத்துள்ளார்.

கேப்டனாக கோலி

டெஸ்டுகள் – 50 இன்னிங்ஸில் 13 சதங்கள்
ஒருநாள் போட்டிகள் – 40 இன்னிங்ஸில் 10 சதங்கள்இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 5

கோலி இன்று:

52 பந்துகளில் அரை சதம்: கோலியின் அதிவேக டெஸ்ட் அரை சதம்

110 பந்துகளில் சதம்: கோலியின் அதிவேக டெஸ்ட் சதம்

* கோலியின் கடைசியாக எடுத்த ஆறு அரை சதங்களும் சதங்களாக மாறியுள்ளன. அதில் மூன்று இரட்டைச் சதங்கள்!இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 6

கோலியின் ஆறு 50+ ஸ்கோர்கள்

235
204
103*
104*
213
100* (பேட்டிங்)

* இந்த வருடம் இலங்கை அணிக்கு எதிராக 22 டெஸ்ட் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1984-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 22 சதங்கள் எடுக்கப்பட்டன. அச்சாதனையை இலங்கை அணி சமன் செய்துள்ளது!

31-வது ஓவரின்போது 24 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த கோலி, பவுண்டரி அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை அவர் கடந்தார். இந்த இலக்கை எட்டும் 11-வது இந்தியர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். 105 இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.  இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 7

அதேபோல 42 ரன்களில் இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 16000 ரன்களைப் பூர்த்தி செய்தார் கோலி. மற்ற அனைத்து வீரர்களை விடவும் மிகவிரைவாக 350 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து சாதனை செய்துள்ளார்.

அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள்

ஸ்மித் – 97 இன்னிங்ஸ்
கோலி, ரூட் – 105 இன்னிங்ஸ்
ஆம்லா, வார்னர் – 109 இன்னிங்ஸ்
வில்லியம்சன் – 110

அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள் – இந்தியர்கள்இன்று மட்டும் கோலி நிகழ்த்திய சாதனைகள் 8

கவாஸ்கர் –  95 இன்னிங்ஸ்
சேவாக் – 98 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் – 103 இன்னிங்ஸ்
கோலி – 105 இன்னின்ங்ஸ்
டிராவிட் – 108 இன்னிங்ஸ்

அதிக டெஸ்ட் ரன்கள் – இந்தியர்கள்

சச்சின் – 15921 ரன்கள்
டிராவிட் – 13265 ரன்கள்
கவாஸ்கர் – 10122 ரன்கள்
லக்‌ஷ்மண் – 8781 ரன்கள்
சேவாக் – 8503 ரன்கள்
கங்குலி – 7212 ரன்கள்
வெங்சர்கார் – 6868 ரன்கள்
அசாருதீன் – 6215 ரன்கள்
விஸ்வநாத் – 6080 ரன்கள்
கபில் தேவ் – 5248 ரன்கள்
கோலி – 5000 ரன்கள்*

அதிவேக 16000 ரன்கள்

விராட் கோலி – 350 இன்னிங்ஸ்
ஆம்லா – 363 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் – 376 இன்னிங்ஸ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *