இவ்ளோ நாளா டி20 பிளேயர்னு நெனச்சிட்டோம்.. உண்மையிலேயே டெஸ்ட் பிளேயர் மட்டும் தான் போல - இளம் இந்திய வீரரை சாடிய முன்னாள் வீரர்! 1

ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் செய்ததை துளியும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் செய்யவில்லை என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்குள் தற்போது நிலவி வரும் ஒரு விவாதம், லிமிடெட் ஓவர் போட்டிகளில் யார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பது? என்றுதான். ஏனெனில் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது அதீத நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்து விளையாட வைத்து வருகிறது. ஆனால் அதற்கு அவர் துளியும் நியாயம் சேர்க்கவில்லை.

இவ்ளோ நாளா டி20 பிளேயர்னு நெனச்சிட்டோம்.. உண்மையிலேயே டெஸ்ட் பிளேயர் மட்டும் தான் போல - இளம் இந்திய வீரரை சாடிய முன்னாள் வீரர்! 2

டி20 உலககோப்பை தொடரில் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் உள்ளே எடுத்துவரப்பட்டு முதல் நான்கு போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டார். அவரும் முக்கியமான தருணங்களில் பேட்டிங்கில் சொதப்பியதால் வெளியேற்றப்பட்டு, கடைசி இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட் மீண்டும் உள்ளே கொண்டுவரப்பட்டார்.

ரிஷப் பண்ட் மீண்டும் பொறுப்பின்றி சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அதையும் பொருட்படுத்தாமல், நியூசிலாந்து அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இவ்ளோ நாளா டி20 பிளேயர்னு நெனச்சிட்டோம்.. உண்மையிலேயே டெஸ்ட் பிளேயர் மட்டும் தான் போல - இளம் இந்திய வீரரை சாடிய முன்னாள் வீரர்! 3

விளையாடிய ஒரு டி20 போட்டியில் ஆறு ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்ததாக ஒருநாள் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் பண்ட் சொதப்பிவருவதால், அந்த இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக 10-15 போட்டிகள் வாய்ப்பு கொடுத்து அவரை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த விவாதத்திற்கு நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: “லிமிடட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 30 போட்டிகள் விளையாடியுள்ளார். ஆனால் அவரது சராசரி 35க்கும் குறைவாக இருக்கிறது.

சஞ்சு சாம்சன் 11 போட்டிகள் மட்டுமே விளையாடி சராசரியாக 60 ரன்கள் வைத்திருக்கிறார். அதே நேரம் விக்கெட் கீப்பிங் நன்றாக செய்யக்கூடியவர். ஐபிஎல் போட்டிகளிலும் நல்ல அனுபவம் வாய்ந்தவர். ஆகையால் அவருக்கு கூடுதல் வாய்ப்புகளை இந்திய அணி நிர்வாகம் கொடுக்க வேண்டும்.

இவ்ளோ நாளா டி20 பிளேயர்னு நெனச்சிட்டோம்.. உண்மையிலேயே டெஸ்ட் பிளேயர் மட்டும் தான் போல - இளம் இந்திய வீரரை சாடிய முன்னாள் வீரர்! 4

லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் இடையே யாரை எடுக்க வேண்டும் என்றால், நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

ரிஷப் பண்ட்டை வெளியில் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். பண்ட் டெஸ்ட் போட்டிகளில் செய்ததைப்போல லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. எதில் நன்றாக விளையாடுகிறாரோ, அதில் அதிக வாய்ப்புகளை கொடுங்கள்.

ரிஷப் பண்ட் அதிரடி வீரர். ஆனால் அது டி20 போட்டிகளுக்கு சரிவரவில்லை என்று தெரிந்தும் வைத்திருப்பது விமர்சனத்திற்கு உரியது. டெஸ்ட் போட்டிகளுக்கு சரியாக வீரராக இருக்கிறார்.” என்று கருத்து தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *