வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் : கேப்டன் ரோகித் 1

மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இலங்கை 135 ரன்கள் எடுக்க இந்திய அணி 139/5 என்று வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

வான்கடே மைதானத்தின் பிட்ச் பவுலர்களுக்கு கொஞ்சம் பவுன்ஸ், ஸ்விங் அளித்தது, கொஞ்சம் பவுன்ஸ், கொஞ்சம் ஸ்விங், அவ்வளவுதான் ஜெண்டில்மேன், இந்திய பேட்ஸ்மென்கள் திணறலுக்கு இது போதாதா? இடுப்புக்குக் கீழ் பந்துகள் வரும்போது கத்தி வீசும் நம் வீரர்கள் இடுப்புக்கு மேல் வந்தால் நடனமாடுவது இன்னும் தொடர்கதையாவதைப் பார்த்து வருகிறோம்.வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் : கேப்டன் ரோகித் 2

கே.எல்.ராகுல் நன்றாக இன்ஸ்விங்கர் ஆன பந்தை அடிக்கப் பார்த்தார், ஆனால் வேகம் மற்றும் ஸ்விங்கினால் பந்து சிக்காமல் பேடைத் தாக்க 4 ரன்களில் வெளியேறினார். ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி காட்டி 20 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 27 ரன்கள் விளாசி, எழும்பி உள்ளே வந்த பந்தை சரியாக ஆட முடியாமல் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷனகா இவரது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

8 ஓவர்கள் மீதமிருக்கும் போது இந்தியாவுக்கு தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 8 ரன்களையும் கடந்தது. 136 ரன்கள் இலக்குப் போட்டியை இந்த அளவுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்ததற்கு இலங்கையை பாராட்டியே ஆக வேண்டும்.வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் : கேப்டன் ரோகித் 3

19-வது ஓவரில் தோனி, தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்க, நுவான் பிரதீப் முதல் 5 பந்துகளில் 6 ரன்களையே கொடுத்து சிக்கனம் காட்டினார், ஆனால் அழுத்த அவர் நரம்புகளைச் சோதிக்க, மிகவும் அன்பான புல்டாஸ் ஒன்றை வீசினார். தினேஷ் கார்த்திக் அந்த அன்பை ஏற்றுக் கொண்டு டீப் மிட்விக்கெட்டில் ரசிகர்கள் மத்தியில் சிக்சர் அடித்தார். 7 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்பது 6 பந்துகளில் வெறும் 3 ரன்களானது. தோனி வெற்றிக்கான ஷாட்டை அடித்தார்.

ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு எதிராக திணறிய ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோர் பிறகு ஒருவாறாக டச்சுக்கு வந்து 38 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்தனர். இந்நிலையில் 30 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயஸ் ஐயர் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். தனஞ்ஜயா வீசிய பந்தை பாண்டே நேராக ஒரு வெளு வெளுக்க பந்து தனஞ்ஜயாவின் விரல்களில் பட்டு ரன்னர் முனையில் ஸ்டம்பில் பட ஐயர் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு 40 பந்துகளில் 55 ரன்கள் தேவை.வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் : கேப்டன் ரோகித் 4

கொஞ்சம் நெருக்கடி தருணத்தில் மணீஷ் பாண்டே புகுந்தார் அடுத்த 5 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடிக்க இலங்கை மீது அழுத்தம் அதிகரித்தது. ஹர்திக் பாண்டியா எழும்பி வந்த பந்தை தேர்ட்மேன் மீது அப்பர் கட் செய்யலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் ஆட பந்து மட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 23 பந்துகளில் 28 ரன்கள் ஆனது.

தோனி இறங்கியவுடன் சிறு Gamble செய்து ஸ்லிப் நிறுத்தியிருந்தால், தோனி எட்ஜ் செய்ய அது பவுண்டரி ஆகியிருக்காது என்பதோடு அவர் ஆட்டமிழக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் ஸ்லிப் நிறுத்தவில்லை. சமீராவின் இதே ஓவரில் தோனிக்கு எதிராக ஒரு எல்.பி முறையீடு எழுந்தது, ரசிகர்கள் நெஞ்சை பிடித்துக் கொண்டிருக்க ரிவியூவில் பந்து மேலே செல்வதாக்த் தெரிந்தது. ஆனால் லைவில் அது அவுட் போல்தான் தெரிந்தது. நடுவர் அவுட் கொடுக்கவில்லை. முரணாக தோனிதான் வெற்றி ரன்களை அடித்தார்.வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் : கேப்டன் ரோகித் 5

இலங்கை தரப்பில் சமீரா, ஷனகா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் கூறியது.

எங்களுக்கு நன்றாக தெரியும் எவ்வளவு பெரிய டார்கெட் ஆக இருந்தால்ம் எங்களது பேட்ஸ்மேன்கள் எடுத்துவிடுவார்கள். இதைத் தான் இந்த தொடர் துவங்கும் முன் பேசினோம். 6 பேட்ஸ்மேன், ஒரு ஆள் ரவுண்டர் இது தன காம்பினேஷன்.

இளம் வீர்ரகள் இந்த போட்டியில் அசத்திவிட்டனர். ஒரு சிலருக்கு முதல் மட்டும் இரண்டாவது போட்டி தான், ஆனால் அவர்கள் ஆடும்போது அப்படி தெரியவே இல்லை. ஏதோ அனுபவம் வாய்ந்த வீர்ரகள் போல் ஆடுகிறார்கள். ஐ.பி.எல் அனுபவம் அவர்களுக்கு கை கொடுத்து இருக்கிறது.

தென்னாப்பிரிக்க தொடருக்காக காத்திருக்கிறோம். இந்த ஹோம் சீசன் எங்களுக்கு அருமையாக அமைந்தது. தர்மசாலாவில் நடந்த போட்டி எங்களுக்கு ஒரு பாடம். பேட்டிங் தான் எங்களது முழு பலம் எனக் கூறினார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *