இலங்கை ரசிகருக்கு ரோகித் சர்மா செய்த உதவி : நெகிழ்ச்சியில் நன்றி கூறிய ரசிகர் 1
கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை மும்பை அணிக்கு வென்று கொடுத்து பெருமைப் பெற்றார். இந்நிலையில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

கிரிக்கெட் போட்டியை காண வந்த இலங்கை ரசிகர் ஒருவருக்கு, ரோகித் ஷர்மா தக்க சமயத்தில் உதவி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக 3-வது இரட்டை சதம் அடித்து ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார்.இலங்கை ரசிகருக்கு ரோகித் சர்மா செய்த உதவி : நெகிழ்ச்சியில் நன்றி கூறிய ரசிகர் 2

இலங்கை அணிக்கு எதிரான மொஹாலியில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் குவித்தார். 115 பந்துகளில் சதம் அடித்த ரோகித், அடுத்த 36 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். முதல் சதத்தில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் தான் அடித்தார். ஆனால் இரண்டாவது சதத்தில் ரோகித் 10 சிக்ஸர்களை விளாசினார். மொத்தம் 12 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்த போட்டியில் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியாக இரட்டை சதத்தால் 392 ரன்காள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 251 ரன்கள் எடுத்தது

இந்தியா – இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண இலங்கையில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் முகமது நீலம் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் என மூவர் இந்தியாவிற்கு வந்தனர். டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது முகமதின் தந்தை தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி தெரிய வந்துள்ளது.இலங்கை ரசிகருக்கு ரோகித் சர்மா செய்த உதவி : நெகிழ்ச்சியில் நன்றி கூறிய ரசிகர் 3

ஆனால் முன்னதாகவே டிசம்பர் 26 ஆம் தேதி முகமது தனது நாட்டிற்கு திரும்பி செல்ல டிக்கெட் புக் செய்திருந்தால், உடனடியாக தனது தந்தையை காண இலங்கைக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்துள்ளார். இந்த செய்தி சச்சினின் தீவிர ரசிகர் சுதீர் கவுதம் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவிற்கு தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைக் கேட்ட ரோகித், உடனடியாக முகமதை அழைத்து அவர் இலங்கை செல்வதற்காக புதிய டிக்கெட் ஒன்றை புக் செய்துக் கொடுத்துள்ளார். மேலும், தந்தையின் அறுவை சிகிச்சைக்கு பண தேவை இருந்தால், தயங்காமல் தன்னிடம் கேட்டுக்குமாறும் ரோகித் தெரிவித்துள்ளார்.இலங்கை ரசிகருக்கு ரோகித் சர்மா செய்த உதவி : நெகிழ்ச்சியில் நன்றி கூறிய ரசிகர் 4

இத்தகைய உதவி செய்த ரோகித்திற்கு மிகப்பெரிய நன்றி என்றும், ரசிகர்கள் மீது இதுப்போன்ற அன்பு வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களை தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்றும் முகமது நீலம் தெரிவித்துள்ளார்.ரோகித்தின் இந்த நெகிழ்ச்சியான செயல் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

அதே போல் விராட் கோலியும் முகமது நீலமை தொடர்புக் கொண்டு அவரின் தந்தை உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 3 ஆவது இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *