குல்தீப் மற்றும் சகாலுக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? ரோகித் சர்மா இன்டர்வியூ!!

குல்தீப் யாதவ் மற்றும் யுஜவேந்திர சகால் இணை கிட்டத்தட்ட அஷ்வின் மற்றும் ஜடேஜாவை ஓரம் கட்டி விட்டனர் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.

ஆனால் அஷ்வின் மற்றும் ஜடேஜாவைப் போல் இக்கட்டான சூழ்நிலைகளில் இவர்களால் செயல்பட முடியுமா என்பது சந்தேகம் தான். ஆஸ்திரேலியாவுடான தொடரிலேயே பார்த்திருக்கலாம், முதலில் துவக்கத்தில் வீசும் பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியாத சமயத்தில் அடுத்து வரும் சுழற்ப்பந்து வீச்சாளர்கள் தான் அந்த விக்கெட்டை எடுத்து தர வேண்டிய கட்டாயம் இரு ஸ்பின்னர்களுடையது தான்.

ஆனால், இந்த இரு இணைகளுக்கும் அந்த நெருக்கடியான விக்கெட் எடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளில் தடுமாறுகிறது இந்த இணை ஆஸ்திரேலியாவுடனான தொடரில் கேடர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தான் அந்த வேலையை செய்தனர்.

இதை பார்த்தால் ஜடேஜா மற்றும் அஷ்வினை இவ்வளவு சீக்கிரத்தில் ஓரம் கட்டுவது அவ்வளவு நல்லதல்ல என்று தான் தெரிகிறது.

தற்போது செய்தியைப் பார்ப்போம். ரோகித் சர்மா இந்த ஸ்பின் இணைகளை பேட்டி எடுக்கிறார். அவர்களுக்கு என்ன பிடிக்கும்? அவர்களது பெண் ரசிகர்களுக்கு என்ன செய்தி சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.

பெண் ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கல் உங்களை அனுகினால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு ...

சகால் : நான் அவர்களைப் பற்றி நிறைய பேசுவேன், ஆனால் அவர்களின் பேச எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு 4 அல்லது 5 வருடங்கள் பழக்கம் எனில் எந்த கூச்ச்மும் இல்லாமல் நன்றாக பேசுவேன்.

குல்தீப் : அவர்களில் யாராவது ஒருவரைத் தெரிந்தால் மிக நன்றாக எவ்வித தயக்கமும் இன்றி பேசுவேன். நான் பெண்களிடம் நிறைய பேசியதில்லை, அந்த நேரத்தை எல்லாம் எனது பயிற்சியில் செலவழித்தேன்.

ரேப்பிட் ஃபையர் ரவுண்டில் கேட்ட கேள்விகள்

1.உங்களுக்கு பிடித்த நடிகை யார்?

சகால் : கத்ரீனா கைப்

குல்தீப் : ஜாக்கிலின் பெர்னாண்டஸ்

2.கார் வாங்க வேண்டுமானால் எந்த கார் வாங்குவீர்கள்?

சகால் : போர்ச்

குல்தீப் : மஸ்டாங்

3.கனவு இடம் ?

சகால் : போரா போரா (பங்கம்)

குல்தீப் : பாரிஸ்

4.ஒருவரின் காண்டாக்ட் உங்கள் போனில் இருக்க வேண்டு என்றால்? அது யாராக இருக்கும்?

சகால் : டுவைன் ஜான்சன் – தி ராக்

குல்தீப் : நெய்மர் – பிரேசில் கால்பந்து வீரர்

Editor:

This website uses cookies.