விராட் கோலி லிஸ்ட்லயே இல்ல,ஐபிஎல் தொடரில் யாருக்கு பந்து வீசுவது கடினம்.. தோனியா..? ரோஹித்த..? ; ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர் !! 1
விராட் கோலி லிஸ்ட்லயே இல்ல,ஐபிஎல் தொடரில் யாருக்கு பந்து வீசுவது கடினம்.. தோனியா..? ரோஹித்த..? ; ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர்..

ஐபிஎல் தொடரில் யாருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

2008 முதல் இன்று வரை நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில், வெற்றிகரா கேப்டன் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் என்ற வரிசையில் இடம்பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு மத்தியில் அனைத்து தொடர்களிலும் யார் சிறந்த கேப்டன் அல்லது சிறந்த பேட்ஸ்மேன் அல்லது யாருக்கு பந்துவீசுவது கடினம் என்பது போன்ற ஒப்பீடு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுங்களுக்கு இடையில் நடைபெறுவது வழக்கம்.

விராட் கோலி லிஸ்ட்லயே இல்ல,ஐபிஎல் தொடரில் யாருக்கு பந்து வீசுவது கடினம்.. தோனியா..? ரோஹித்த..? ; ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர் !! 2

ஆனால் இந்த இரண்டு அணி கேப்ன்களுக்கு கீழ் விளையாடிய மற்றும் இரண்டு அதிரடி பேட்ஸ்மெனுக்கும் எதிராக பந்துவீசிய வீரர் இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை மற்றும் வித்தியாசம் குறித்து பேசுவது என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் கவனத்தை பெரும்.

அந்தவகையில் இரண்டு தோனி மாற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரண்டு பேர் தலைமையின் கீழும் விளையாடிய மற்றும் இரண்டு பேருக்கு எதிராக பந்தும் வீசிய இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஹர்பஜன் சிங்., ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகிய இருவரில் யாருக்கு பந்துவசுவது கடினம் என்பது குறித்து விவரித்து பேசியுள்ளார்.

விராட் கோலி லிஸ்ட்லயே இல்ல,ஐபிஎல் தொடரில் யாருக்கு பந்து வீசுவது கடினம்.. தோனியா..? ரோஹித்த..? ; ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர் !! 3

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில்.,“ரோகித் சர்மாவிற்கு எந்த நாளில் எந்த நேரத்தில் பந்து வீசினாலும் மிகவும் கடினம்தான், நான் தோனிக்கு எதிராக அதிக அளவில் பந்து வீசியது கிடையாது, ஏனென்றால் என்னுடைய ஸ்பெல் முடிந்த பிறகு தான் தோனி களமிறங்குவார், இருந்தாலும் அவருக்கு எதிராக ஒரு சில நேரங்களில் பந்து வீச கிடைத்த வாய்ப்பில் நான் அவருடைய விக்கெட்டை விழித்திருக்கிறேன். தோனி கடைசி மூன்று ஓவர்களில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவார் ஆனால் அந்த சமயங்களில் என்னுடைய ஓவர் முடிந்திருக்கும்”.

விராட் கோலி லிஸ்ட்லயே இல்ல,ஐபிஎல் தொடரில் யாருக்கு பந்து வீசுவது கடினம்.. தோனியா..? ரோஹித்த..? ; ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர் !! 4

“ஆனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அவர் ஒரு கிளாஸ் பிளேயர், ஃபினிஷராக களமிரங்கும்போது தான் தோனி மிகவும் அதிரடியாக விளையாடுவார். ஆனால் ரோஹித் சர்மா துவக்கத்திலோ அல்லது இறுதியிலே எப்பொழுதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார், அவரைப் போன்ற ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் கிடையவே கிடையாது” என ஹர்பஜன் சிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *