அபாரமாக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி ட்வீட் செய்த ரோகித் சர்மா 1

பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததில் ஸ்மித், மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

அதாவது சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து முறியடித்தார்.

அபாரமாக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி ட்வீட் செய்த ரோகித் சர்மா 2
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர்.

‘அருமையான பேட்ஸ்மெனின் அருமையான சதம் அனைவருக்கும் மேலான ஒரு கிளாசில் உள்ளார் ஸ்மித், ஒருவேளை விராட் கோலி இவருக்கு சவாலாக இருக்கலாம்’ என்று ஆஸி.வர்ணனையாளர்களில் ஒருவர் ஸ்மித்தின் இந்தச் சதம் குறித்து வர்ணித்தார்.

அபாரமாக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி ட்வீட் செய்த ரோகித் சர்மா 3
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates with Shaun Marsh of Australia after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

இந்திய அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா தன் ட்வீட்டில் ஸ்மித் இன்னிங்ஸ் பற்றி குறிப்பிடும்போது, “என்ன மாதிரியான வீரர் ஸ்டீவ் ஸ்மித்!! அவுட் ஆவது போலவே தெரியவில்லையே. வெல் பிளேய்ட்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இன்று இந்த 3-வது வேக 22வது சதத்துடன் 2017-ல் 1,000 ரன்களையும் கடந்து விட்டார் ஸ்மித். இதனை தொடர்ந்து 4-வது ஆண்டாக செய்கிறார் ஸ்மித். இதற்கு முன்பாக இதனைச் செய்த ஒரே ஆஸி. வீரர் மேத்யூ ஹெய்டன் மட்டுமே.

அபாரமாக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி ட்வீட் செய்த ரோகித் சர்மா 4
BRISBANE, AUSTRALIA – NOVEMBER 26: Mitchell Starc of Australia celebrates after taking the wicket of Chris Woakes of England during day four of the First Test Match of the 2017/18 Ashes Series between Australia and England at The Gabba on November 26, 2017 in Brisbane, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

பிரிஸ்பன் டெஸ்ட்டில் தனது மெதுவான சதத்தை எடுத்த ஸ்மித் இந்தச் சதத்தை 138 பந்துகளில் எடுத்து தன் டெஸ்ட் அதிவேக சத சாதனையையும் நிகழ்த்தினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.