அடுத்து வரும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரை முன்னிட்டு ஒருநாள் தொடருக்கு துணை-கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமிக்கலாம் என தகவல் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்னும் எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் டெக்கான் கிரோனிகல் என்னும் ஆங்கில செய்தி-தாள், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மூன்று முறை ஐபில் கோப்பையை வாங்கி தந்த ரோகித் ஷர்மாவை துணை-கேப்டனாக நியமிக்க படுவார் என கூறியிருக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட் அணிக்கு எதிராக 129 ரன் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அடித்தது. ஆனால், அந்த ரன்னை வைத்தே 1 ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐபில் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.
இதனால் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்க படலாம் என தகவல் வந்துள்ளது. துணை கேப்டன் யார் என்று தேர்வாளர்கள் தேர்வு செய்து விட்டனர். அதை தேவைப்படும் போது, வெளியிடுவோம் என பிசிசிஐ கூறியுள்ளது.
“துணை கேப்டன் யார் என்று தேர்வாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் யார் என்று தேர்வு செய்து விட்டார்கள். தேவை படும் போதும் நாங்கள் அறிவிப்போம்,” என பிசிசிஐ கூறியுள்ளது.
முன்னதாக, டி20 அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு வந்தால், இறுக்கமாக பிடித்து கொள்வேன் என ரோகித் கூறினார்.
அதாவது,” நான் கேப்டன் ஆகவேண்டும் என இதுவரை நினைக்கவில்லை. ஆனால் அந்த வாய்ப்பு வந்தால், இரு கையால் இறுக்கமாக பிடித்து கொள்வேன்,” என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.
முக்கிய தேர்வாளர்கள் எம்.கே. பிரசாத் மற்றும் தேவங் காந்தி ஆகியோர் இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்ல உள்ளார்கள். மூன்றாவது தேர்வாளரான சரந்தீப் சிங் இந்தியாவிலேயே இருப்பார்.
யாருக்காவது காயம் என்றால், சாம்பியன்ஸ் ட்ராப்பிக்காக இந்திய அணியில் கூடுதலாக அறிவித்திருக்கும் வீரர்களில் இருந்துதான் மாற்றப்படும். சாம்பியன்ஸ் ட்ராப்பிக்காக கூடுதலாக 5 வீரர்களை சேர்த்துள்ளர்னர். அவர்கள் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் மற்றும் சுரேஷ் ரெய்னா.
காயம் காரணமாக மனிஷ் பாண்டே விலகியதால், அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளனர்.
“அவர்கள் எப்பொழுதுமே கூடுதலாக வைத்திருக்கும் வீரர்களில் இருந்துதான் எடுப்பார்கள், ஆனால் அந்த பட்டியலை வெளியிடமாட்டார்கள். ஆனால் இந்த முறை பிசிசிஐ வெளியிட்டது,” என தகவல்கள் வந்துள்ளது.
மினி உலக கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. தன்னுடைய முதல் போட்டியில் ஜூன்-4 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.