இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ட்விட்டர் தளத்தில் நன்றாக ஆடியிருக்க வேண்டும் எனக் கூறிய ஹர்பஜன் சிங்கிற்கு சூசகமாக கேலியுடன் பதிலளித்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேனான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி கடந்த சனிக்கிழமை (நவ்.2) இரண்டாவது போட்டியில் களம் இறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோவின் அபாரமான ஆட்டத்தால் சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் குவித்தது.
சற்று கடினமான இலக்கை எதிர் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாறியது. துவக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சற்று சோபிக்கத்தவறினர். 11 ரன்னிற்கு இருவரும் தங்களது விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டிடம் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினர்.
இதனை வைத்து ஹர்பஜன் கூறியதாவது,

ரோகித் மற்றும் தவான் இருவரும் துவக்கத்தில் புதிய பந்தை ஆடிக் கொடுத்திருக்க வேண்டும். அது அணிக்கு சற்று உதவியிருக்கும் என நிருபர் விக்ராந்த சிங்கின் ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கு விதமாக ரோகித் சர்மா,
‘அப்படியா, இந்த யோசனை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே’
என கிண்டல் தொனியில் பதிலளித்துள்ளார்.
இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்விடைந்திருந்தாலும். அடுத்த போட்டியில் வெல்லும் முனைப்பில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் களம் இறங்கவுள்ளது.

நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பய்னத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளை இரு அணிகளும் வெல்ல, மூன்றாவது போட்டி மிக அற்புதமாக சரியான ஒரு கிரிக்கெட் போட்டியாக ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை சென்றது.
அதே போல், டி20 தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளுன் சென்றுள்ளது. மூன்றாவது போட்டியிலும் அதே போன்ற ஒரு போட்டி கடைசி ஓவர் வரை செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மூன்றாவது போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் மைதானம் முதன் முதலாக சர்வதேச போட்டிகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. 1933ல் இருந்து இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்றது. முதன்முதலில் மும்பை மைதானத்தில் நடைபெற்றது. தற்போது நடைபெறும் திருவனந்தபுரம் மைதானம் இந்தியாவின் 50ஆவது மைதானமாகும்.
இந்த போட்டில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் வெற்றிபெறும் முதல் தொடராகும்.