மீண்டும் காயம்... பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகும் கேப்டன் ரோஹித் சர்மா..? கேப்டன் யார்..? வெளியான அதிர்ச்சி தகவல் !! 1
மீண்டும் காயம்… பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகும் கேப்டன் ரோஹித் சர்மா..? கேப்டன் யார்..? வெளியான அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய இந்த தொடரில் இதுவரை 15 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை அசால்டாக வீழ்த்திய இந்திய அணி, அடுத்ததாக 9ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

சமீபகாலமாகவே மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் அமெரிக்கா அணியுடன் தோல்வியை சந்தித்திருந்தாலும், இந்திய அணியுடனான போட்டி என்றால் பாகிஸ்தான் அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது வழக்கம் போது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மீண்டும் காயம்... பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகும் கேப்டன் ரோஹித் சர்மா..? கேப்டன் யார்..? வெளியான அதிர்ச்சி தகவல் !! 2

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயர்லாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியின் போதும் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ரோஹித் சர்மாவிற்கு தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ரோஹித் சர்மா ஒருவேளை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *