கிரேட் காளியை சந்தித்த இந்திய வீரர்களை கலாய்த்தார் ரோகித் ஷர்மா

சில நாட்களாக கிரேட் காளியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.

கொலோம்போவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு குத்துசண்டை வீரரான கிரேட் காளியை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்தனர்.

கிரேட் காளியுடன் இந்திய வீரர்கள் இருக்கும் புகை படத்தை கண்ட பிறகு, இந்திய வீரர்களை கலாய்த்தார் ரோகித் ஷர்மா.

WWE பெல்ட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, இந்திய வீரர்களை கலாய்த்தார் ரோகித்.

இந்தியன் பிரீமியர் லீக் 10வது சீசன் இறுதி போட்டியில் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றதற்கு, WWE வீரர் ட்ரிபிள் எச், ரோகித் ஷர்மாவுக்கு அந்த பெல்ட்டை பரிசாக அளித்தார்.

இந்த டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை ஏற்கனவே வென்றது. இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ரோகித் ஷர்மா, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.