இங்கிலாந்தை பாத்து கத்துக்கோங்க.. ஒழுங்கா ஆடாத பேட்ஸ்மேனுக்கு என்ன கதின்னு; இந்தியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் – ரோகித் சர்மா மீது முன்னாள் வீரர் சரமாரி கேள்வி!

இங்கிலாந்து அணி செய்ததை இந்தியாவால் ஏன் செய்ய  முடியவில்லை? அதுதான் நம் தோல்விக்கு காரணம் என்று ரோகித் சர்மா மீது கடுமையாக சாடியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறி பேரதிர்ச்சியை கொடுத்ததால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சரியாக செயல்படாதது தான் என்று கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் இருவருமே சரியான துவக்கம் வைத்துக் கொடுக்கவில்லை.

இந்த தொடர் முழுவதும் இருவரும் அடித்த ரன்களை எடுத்து பார்த்தால் 150க்கும் குறைவாகவே இருக்கிறது. மற்ற அணிகளுக்கு நல்ல துவக்கம் கிடைத்து ரன்களை அடிக்கின்றனர். ஆனால் இந்தியாவிற்கு துவக்கம் கிடைப்பதே சிக்கலாக இருக்கிறது.

மேலும் சரியாக ஆடாத வீரர்களை வெளியில் அமர்த்தி விட்டு வேறொரு வீரரை பயன்படுத்துவதற்கும் அணியில் தைரியம் இல்லை. இவற்றை குறிப்பிட்டு கடுமையாக ரோகித் சர்மாவை சாடியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

“இங்கிலாந்து அணியில் சில மாதங்களுக்கு முன்பு நம்பர் ஒன் டி20 வீரராக இருந்த டேவிட் மலான் இந்த உலக கோப்பையில் பல போட்டிகளில் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். ஏனெனில் மற்ற சில வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்  துவக்கம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

இந்தியாவில் இப்படி செய்திருக்க முடியுமா? ரிஷப் பண்ட்டை துவக்க வீரராகவும் பயன்படுத்தி இருக்கலாம் அல்லவா?.” என்று ரோகித் சர்மா மீது கேள்விகளை முன் வைத்தார்.

மேலும் பேசிய அவர், “பவர்-பிளே ஓவர்களில் இறக்கிவிட்டால் முடிந்தவரை அதிகமாக ரன்களை அடிக்க வேண்டும் என்று அணியில் இருக்கும் அனைத்து பேட்ஸ்மன்களுக்கும் தெரியும். இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் ஹேல்ஸ் மற்றும் பட்லர் இருவரும் தனித்தனியாக 200 ரன்களுக்கும் அதிகமாக இந்த உலக கோப்பையில் அடித்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை பார்த்தால் 125 ரன்கள் கூட நடிக்கவில்லை.

சரியாக விளையாடவில்லை என்று தெரிந்தும் ஏன் தொடர்ந்து அவர்கள் விளையாட வைக்கப்பட்டார்கள்?. இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம். மேலும் ஒரு சில வீரர்களை தவிர வேறு வீரர்களுக்கு நாம் எந்த இடத்தில் விளையாட வைக்கப்படுவோம் என்றே தெரியவில்லை.” என விமர்சித்தார்.

Mohamed:

This website uses cookies.