தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடரில் உலகில் உள்ள டாப் 8 அணிகள் விளையாடுகின்றது.
இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடந்தது. அந்த போட்டியின் போது 46வது ஓவரில் வாஹப் ரியாஸுக்கு முழுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக ரும்மன் ரயீஸுக்கு பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்தது.
8.4 ஓவர்கள் வீசிய வாஹப் ரியாஸ் 87 ரன் வாரி கொடுத்துள்ளார். அந்த ஓவரின் போது அவர் வலியால் மைதானத்தில் உட்கார்ந்து விட்டதால், வலியால் துடித்த அவர் மைதானத்தை விட்டு சென்றார். இதனால், அவர் பேட்டிங் செய்ய கூட வரவில்லை. ஸ்கேன் செய்த பிறகு உள்காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்க பட்டது. இதனால் அவருக்கு 2 வாரமாவது தேவை படுகிறது.
ரும்மன் ரயீஸ், இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாட வில்லை. அவரது முதல் சர்வதேச டி20 போட்டியை கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடினார். ஆனால் முதல் நிலை கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடியுள்ளார். இதுவரை 42 முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 64 விக்கெட் எடுத்துள்ளார்.